Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப பவர்புல்லான வீரர் அவர்... வில்லியர்ஸ் குறித்து விராட் கோலி பாராட்டு

துபாய் : இந்த ஐபிஎல் சீசனின் மிகவும் பவர்புல்லான வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் வெற்றிக்கு ஆர்சிபி அணியின் டீ வில்லியர்ஸ் முக்கிய காரணமாக விளங்கினார். 22 பந்துகளில் அவர் அடித்த 55 ரன்கள் ஆர்சிபி வெற்றிக்கு வழிவகுத்தது.

வெற்றிக்கு காரணமான வில்லியர்ஸ்

வெற்றிக்கு காரணமான வில்லியர்ஸ்

நேற்றைய ஐபிஎல்லின் 33வது போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக டீ வில்லியர்சின் ஆட்டம் இருந்தது. 22 பந்துகளில் அவர் அடித்த 55 ரன்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

விராட் கோலி பாராட்டு

விராட் கோலி பாராட்டு

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரின் மிகவும் பவர்புல்லான வீரராக ஏபி டீ வில்லியர்ஸ் மாறியுள்ளதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். 178 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி அணி ஆடிய நிலையில், போட்டியில் வில்லியர்ஸ் அடித்த 6 சிக்ஸ்கள் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அணியை முன்னெடுத்த வில்லியர்ஸ்

அணியை முன்னெடுத்த வில்லியர்ஸ்

14வது ஓவரில் 43 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் அணி தோல்வி அடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அணியை வழிநடத்தி டீ வில்லியர்ஸ் வெற்றி பெற செய்துள்ளார். மேலும் ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார்.

விராட் புகழ்ச்சி

விராட் புகழ்ச்சி

இந்நிலையில் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளையாடும் திறன் டீ வில்லியர்சுக்கு இருப்பதாக விராட் கோலி புகழ்ந்துள்ளார். டீ வில்லியர்ஸ் சிறப்பாக ஆட ஆரம்பித்தால் வெற்றிக்கு சொற்ப அளவிலேயே சான்ஸ் இருப்பதாக எதிரணிக்கு தெரியவந்துவிடும் என்றும் கோலி கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 18, 2020, 14:15 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+