Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.. கோலி அதிரடி பேச்சு

Recommended Video

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: கோலி அதிரடி பேச்சு- வீடியோ

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அடுத்து பங்கேற்க உள்ள நிலையில், தான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து கோலி தன் கருத்துக்களை கூறினார்.

நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை

நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை

கோலி, "ஒவ்வொரு தொடரில் இருந்தும், போட்டியில் இருந்தும் நாம் நிறைய கற்றுக் கொள்வோம். கடந்த காலத்தை பார்க்கும் போது இப்போது எனக்கு நானே உறுதி செய்து கொள்கிறேன். யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை" என இந்த தொடர் குறித்து கூறினார்.

அணியின் தேவை தான் முக்கியம்

அணியின் தேவை தான் முக்கியம்

"என்னை பொறுத்தவரை அணிக்கு என்ன தேவையோ அதை 100 சதவீதம் களத்தில் கொடுக்க வேண்டும். எனக்கு பல நாடுகளுக்கு சென்று ஆடுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை" என குறிப்பிட்டார் கோலி.

டெஸ்டில் கலக்கும் கோலி

டெஸ்டில் கலக்கும் கோலி

கோலி டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டு முழுவதும் ரன் குவிப்பில் ஈடுபட்டு இருந்தார். ஒரு சில போட்டிகள் தவிர பெரும்பாலான போட்டிகளில் 50 ரன்களுக்கும் மேல் ரன் எடுத்துள்ளார். அவரது டெஸ்ட் சராசரி 54க்கும் மேல் உள்ளது.

கவனம் தேவை

கவனம் தேவை

இதையடுத்து மிகவும் தன்னம்பிகையுடன் இருக்கும் கோலி தான் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை என கூறியுள்ளார். ஆனால், கோலி எப்போது சொதப்புவார் அவரை விமர்சிக்கலாம் என பலர் காத்துக் கொண்டு இருக்கின்றனர். அதையும் கோலி மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Story first published: Monday, December 3, 2018, 12:12 [IST]
Other articles published on Dec 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+