Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீ வில்லியர்ஸ்கிட்ட பேசினேன்... அப்புறமா தான் ஒரு தெளிவே வந்துச்சு... கேப்டன் மகிழ்ச்சி

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி கேப்டன் 73 ரன்களை குவித்துள்ளார்.

இதன்மூலம் நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி கொண்டு 1க்கு 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி வீரரும் தன்னுடைய நண்பருமான ஏபி டீ வில்லியர்சுடன் உரையாடியதாகவும் அதன்மூலம் தன்னுடைய போட்டியில் தெளிவு ஏற்பட்டதாகவும் விராட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய டி20 தொடரின் 2வது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடாத கேப்டன் விராட் கோலி நேற்றைய போட்டியில் 73 ரன்களை குவித்துள்ளார்.

3000 ரன்கள் குவிப்பு

3000 ரன்கள் குவிப்பு

இதன்மூலம் டி20 வடிவத்தில் 3000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடாத தான் போட்டிக்கு முன்னதாக தன்னுடைய ஆர்சிபி சக வீரரும் தன்னுடைய நண்பருமான ஏபி டீ வில்லியர்சுடன் இதுகுறித்து ஆலோசித்ததாக கோலி குறிப்பிட்டுள்ளார்.

பின்பற்றிய கோலி

பின்பற்றிய கோலி

அவருடன் தான் பேசியதையடுத்து தனக்கு தன்னுடைய பார்ம் குறித்த ஒரு தெளிவு கிடைத்ததாகவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏபி டீ வில்லியர்ஸ் மைதானத்தில் பிட்ச் குறித்து கவலை கொள்ளாமல் பந்தை எதிர்கொண்டு விளையாட அறிவுறுத்தியதாகவும் நேற்றைய போட்டியில் தான் அதைதான் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக கைகொடுத்த நிர்வாகம்

சிறப்பாக கைகொடுத்த நிர்வாகம்

மேலும் நேற்றைய போட்டியில் தன்னுடன் இருந்து தன்னை தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா சரியாக ஊக்குவித்ததாகவும் தான் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கியதாகவும் விராட் கூறினார். மேலும் இந்திய அணி நிர்வாகமும் சிறப்பாக கைகொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, March 15, 2021, 13:26 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+