ரன் ஓட மறுத்த கேஎஸ் பரத்.. அந்த வார்த்தையை பயன்படுத்தி திட்டிய கோலி.. என்ன நடந்தது?
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ரன் ஓட மறுத்த கே எஸ் பரத்தை விராட் கோலி கடுப்பாகி திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டி தற்போது டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் அடித்தது.
இந்திய அணி தற்போது 550 ரகளை தாண்டி அபாரமாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து உள்ளனர்.

ஓடியே எடுத்தார்
இந்த ஆட்டத்தில் விராட் கோலி மிகவும் பொறுமையாக விளையாடி வந்தார். விராட் கோலி 59 ரன்கள் அடித்தபோது 5 பவுண்டரிகளை அடித்து இருந்தார். ஆனால் அதன் பிறகு சதம் அடிக்கும் வரை அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அனைத்து ரன்களையும் ஓடியே எடுத்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வளவு கட்டுக்கோப்பாக பவுண்டரிகள் வராமல் தடுத்தனர்.

திட்டினார்
ஸ்ரேயாஸ் ஐயருக்கு திடீரென்று காயம் ஏற்பட்டதால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால் ஜடேஜா ஆட்டம் இழந்த பிறகு விக்கெட் கீப்பர் கே எஸ் பரத் தான் களத்திற்கு வந்தார். ஆட்டத்தில் 109 வது ஓவரின் போது விராட் கோலி ரன் ஓட முயன்ற போது கேஸ் பரத் அதனை மறுத்துவிட்டார்.இதனால் கடுப்பான விராட் கோலி கேஸ் பரத்தை பார்த்து முறைத்து அசிங்கமாக திட்டினார்.

ஏன் ஆத்திரம்
விராட் கோலியின் கோபத்தில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடிக்காத நிலையில், தற்போது அவருக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கே எஸ் பரத்தை நம்பி அவர் ரன் அவுட் ஆகியிருந்தால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலே போயிருக்கும். இதனால் தான் விராட் கோலி இவ்வளவு ஆத்திரப்பட்டு திட்டினார்.

திருப்தியான இன்னிங்ஸ்
இதே போன்ற மற்றொரு சமயத்தில் விராட் கோலி பில்டிங்கில் நின்றவரிடம் பந்து அடித்து விட்டு ஓட முயன்றார். அப்போது கே எஸ் பரத் விராட் கோலி தடுத்தார். கேஸ் பரத் பொறுத்தவரை இன்றைய நாளில் ஓரளவுக்கு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் அரை சதம் அடிக்கும் வாய்ப்பு அவர் வீணடித்தார். 88 பந்துகளை எதிர்கொண்ட அவர் மூன்று சிக்சர்கள் , இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ரிஷப் பண்ட் போல் ஆட முடியவில்லை என்றாலும் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது.


Click it and Unblock the Notifications