இந்திய பேட்டிங் சொதப்பல்.... தனியாளாக விளையாடினார் கோஹ்லி...இங்கிலாந்தில் முதல் சதம்!
Recommended Video

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் ஏமாற்றம் அளித்தாலும், ஆறுதல் அளிக்கும் வகையில் தனியாளாக நின்று போராடி முதல் முறையாக இங்கிலாந்தில் சதம் அடித்தார் கேப்டன் விராட் கோஹ்லி.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியுள்ளது. ஆயிரமாவது டெஸ்டில் விளையாடும் முதல் அணியான இங்கிலாந்து டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
கேப்டன் ஜோ ரூட் 80, ஜானி பிரிஸ்டோ 70, கீடன் ஜென்னிங்ஸ் 42 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

287 ரன்கள் சேர்த்தது
முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. இரண்டாவது நாளான நேற்று மேலும் 2 ரன்களை எடுத்து, 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சுருண்டது இங்கிலாந்து
ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து 287 ரன்களுக்கு சுருண்டது. 71 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்களை இங்கிலாந்து இழந்தது.

ஏமாற்றிய பேட்டிங் வரிசை
அதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், ஷிகார் தவன் நல்ல துவக்கத்தை தந்தனர். அவர்கள் நிலைத்து ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முரளி விஜய் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல் 4, ரஹானே 15, தினேக் கார்த்திக் 0 என அனைவரும் ஏமாற்றினர்.

கோஹ்லி அபாரம்
இந்த நிலையில், கேப்டன் விராட் கோஹ்லி நிதானமாக விளையாடினார். அவர் 149 ரன்கள் எடுத்த நிலையில் கடைசியாக ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் கடந்த 2014ல் மொத்தமாக 134 ரன்கள் மட்டுமே எடுத்த கோஹ்லி, இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி, இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தை அடித்தார். இறுதியில் இந்தியா 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தின் சாம் குர்ரான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து, 2வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. 22 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து உள்ளது.


Click it and Unblock the Notifications