Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி சதம்.. ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தல்.. பாண்டிங்கை முந்திய கோலி

டாக்கா : வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசினார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதம் விளாசி , ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கோலி முறியடித்தார்.

மேலும், குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 72 சர்வதேச சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார்.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி அவ்வளவாக பங்கேற்கவில்லை. கிடைத்த வாய்ப்பிலும் அரைசதம் அடித்தாலும், அதனை சதமாக விராட் கோலி மாற்ற முடியாமல் தவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 ஆட்டத்தில் சதம் விளாசி, 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் செஞ்சூரி அடித்தார்.

கேட்ச் மிஸ்

கேட்ச் மிஸ்

எனினும், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறினார். முதல் 2 போட்டியில் கூட கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் கூட லிட்டன் தாஸ் விராட் கோலி கொடுத்த எளிதான கேட்ச் தவறவிட்டார். இதனையடுத்து ,இது எனது நாள் என்று புரிந்து கொண்ட விராட் கோலி, நிதானமாக விளையாடினார்.

72 வது சதம்

72 வது சதம்

மறுபுறம் இஷான் கிஷன் அதிரடியாக ஆட, விராட் கோலி அவருக்கு ஆதரவு கொடுத்து , எந்த நெருக்கடியும் இல்லாமல் விராட் கோலி ரன்களை சேர்த்தார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் 210 ரன்களில் ஆட்டமிழந்ததும், கோலி, தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 72வது சதத்தை சிக்சர் விளாசி பூர்த்தி செய்தார்.

85 பந்துகளில் சதம்

85 பந்துகளில் சதம்

இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 44வது சதத்தை பதிவு செய்தார். இதனை விராட் கோலி 85 பந்துகளில் பூர்த்தி செய்தது தான் ஹைலைட்டே. இதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். கோலி 91 பந்துகளை எதிர்கொண்டு 113 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Story first published: Saturday, December 10, 2022, 15:06 [IST]
Other articles published on Dec 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+