Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

21 மாதங்களுக்கு பிறகு விராட் கோலி சதம்.. ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் அபார ஆட்டம்.. கவாஸ்கர் சாதனை சமன்

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் 3 ஆண்டுகள், 3 மாதத்திற்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசினார்.

டாஸ் வென்று முதுலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதனையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்திய நிலையில், 289 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 4வது ஆட்டத்தை தொடர்ந்தது.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

விராட் கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர். அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா 28 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு உடல் நிலை சரி இல்லாததால் கே எஸ் பரத் களத்திற்கு வந்தார்.

பரத் அவுட்

பரத் அவுட்

இதனையடுத்து பரத் மற்றும் விராட் கோலி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடிஐய பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர்.பரத் 44 ரன்கள் எடுத்த நிலையில், கவன குறைவான ஷாட் ஆடி பெவிலியன் திரும்பினார்.

கோலி சதம்

கோலி சதம்

எனினும் விராட் கோலி இன்றைய நாள் ஆட்டத்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத நிலையில், விராட் கோலி ஓடியே ரன் எடுத்தார். இதனையடுத்து, விராட் கோலி 241 பந்துகளை எதிர்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 28வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 3 ஆண்டுகள், 3 மாதத்திற்கு பிறகு விராட் கோலி சதத்தை அடித்தார்.

கவாஸ்கர் சாதனை சமன்

கவாஸ்கர் சாதனை சமன்

ஒட்டுமொத்தமாக இது விராட் கோலி அடித்த 75வது சதம் இதுவாகும். இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி கவாஸ்கரை சமன் செய்தார். இருவரும், 8 சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துள்ள நிலையில், சச்சின் 11 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Sunday, March 12, 2023, 13:41 [IST]
Other articles published on Mar 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+