எப்படீல்லாம் புகுந்து புகுந்து சாதனை செய்யறாரு கேப்டன்... இது என்ன புதுசா இருக்கு!
புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இன்றைய ஒருநாள் போட்டியில் விராட் கோலி 66 ரன்களை குவித்துள்ளார். சதத்திற்கான அவரது வெயிட்டிங் இருந்தாலும் மற்றொரு விஷயத்தில் சாதனை செய்துள்ளார் கோலி.
ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கி விளையாடி 10,000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார் கேப்டன். 190 போட்டிகளில் மட்டுமே விளையாடி இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார் கோலி.
330 இன்னிங்ஸ்களில் விளையாடி 12,662 ரன்களுடன் இந்த சாதனையில் முதலிடத்தில் உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.

சிறப்பான பேட்ஸ்மேன்
இந்திய அணியின் சிறப்பான கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வருவதுடன் தன்னுடைய தனிப்பட்ட பேட்டிங்கையும் சிறப்பாக விளையாடி வருகிறார் விராட் கோலி. அவ்வப்போது சில மோசமான விமர்சனங்ளை எதிர்கொண்டாலும் அணியின் சிறப்பான கேப்டனாகவே அவர் கருதப்படுகிறார்.

2வது ஒருநாள் போட்டி
தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும் கோலியின் ஆட்டம் சிறப்பாகவே காணப்படுகிறது. ஒருநாள் தொடரின் இரு போட்டிகளிலும் அவர் பேட்டிங்கில் கலக்கியுள்ளார். இன்றைய 2வது போட்டியில் 79 பந்துகளில் 66 ரன்களை குவித்துள்ளார். சதத்திற்காக கடந்த 11 இன்னிங்ஸ்களாக அவர் காத்திருக்கிறார். ஆயினும் 7 அரைசதங்களை அடித்துள்ளார்.

3வது இடத்தில் விளையாடி 10,000 ரன்கள்
இந்நிலையில் இன்றைய போட்டியில் 66 ரன்களை அடித்துள்ள விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கி 10,000 ரன்களை பூர்த்தி செய்துள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 190 போட்டிகளில் விளையாடி அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

2வது வீரராக சாதனை
முன்னதாக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், 330 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடி 12,662 ரன்களுடன் இந்த சாதனையில் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 3வது மற்றும் 4வது இடங்களில் முறையே இலங்கையின் குமார சங்ககாரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் காலிஸ் ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications