சதமடித்த கோஹ்லி பறக்க விட்ட முத்தம்.. பதிலுக்கு உம்மா கொடுத்த அனுஷ்கா.. அடடா !
நாட்டிங்ஹம் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார் விராட் கோஹ்லி. சதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த தன் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பறக்கும் முத்தத்தை அனுப்ப, பதிலுக்கு அவரும் திருப்பி அனுப்ப, உடனே சமூக வலைதளங்களும் இந்த செய்திகளோடு "பறபற"க்கத் தொடங்கி விட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளை இழந்து, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுதாரித்து ஆடினர். கேப்டன் கோஹ்லி முதல் இன்னிங்க்ஸில் 97 ரன்கள் அடித்து, மூன்று ரன்களில் சதத்தை தவறவிட்டாலும், அடுத்த இன்னிங்க்ஸில் 103 ரன்கள் எடுத்தார்.

சதம் அடித்த கையோடு, வழக்கம் போல தன் மனைவி அனுஷ்கா சர்மா இருந்த திசை பார்த்து முத்தத்தை பறக்க விட்டார். பதிலுக்கு அனுஷ்காவும் முத்தத்தை பறக்க விட்டார். கோஹ்லி சதம் அடித்த உடன் அனுஷ்கா பக்கம் காமெராவை திருப்பி, கேமராமேன்கள் தங்கள் வேலையே செவ்வனே செய்தார்கள்.
கோஹ்லியின் இந்த சதம் டெஸ்ட் போட்டிகளில் 23வது ஆகும். மொத்தமாக சர்வதேச போட்டிகளில் இதுவரை 58 சதங்கள் அடித்து இருக்கிறார் கோஹ்லி.


Click it and Unblock the Notifications