Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி எப்போது இந்திய அணியில் விளையாடுவார்? காயம் குறித்த நல்ல செய்தியை சொன்ன பிசிசிஐ

பெங்களூரு: காயத்தில் இருந்து மீண்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, விரைவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப உள்ளார். எப்போது அவர் ஆடுகளத்துக்கு திரும்புவார்? எந்த தொடரில் இருந்து இந்திய அணியுடன் இணைந்து விளையாடுவார்? என்ற தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய போது விராட் கோலிக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக, தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலக வேண்டியிருந்தது.

Virat Kohli Set to Return for India vs England ODI Series After Injury Recovery

அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட 37 வயதான விராட் கோலி, தற்போது சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் காயத்தால் அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட முடியாமல் போனதால் அவரை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர்.

தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறந்த செயல்பாட்டு மையத்தில் விராட் கோலி தீவிர உடற்பயிற்சி மற்றும் மறுவாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். அவரது காயம் மிக வேகமாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அங்கு அவரது உடற்தகுதி குறித்து இறுதி கட்ட பரிசோதனை நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவுடன், அவர் மீண்டும் தேசிய அணியில் இணைவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான ஒருநாள் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

IND vs AFG: இந்திய அணியில் மற்றொரு பந்துவீச்சாளர்.. காயத்தில் இருந்து மீண்ட ஹர்ஷித் ராணா சேர்ப்பு

IND vs AFG: இந்திய அணியில் மற்றொரு பந்துவீச்சாளர்.. காயத்தில் இருந்து மீண்ட ஹர்ஷித் ராணா சேர்ப்பு

இந்த ஒருநாள் தொடர் வரும் ஜூலை 14 அன்று பர்மிங்காமில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரின் மூலம் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே சிங்கம்.. 221 ரன் டார்கெட்டை வேட்டையாடிய டூ பிளெசிஸ்.. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி

சிஎஸ்கே சிங்கம்.. 221 ரன் டார்கெட்டை வேட்டையாடிய டூ பிளெசிஸ்.. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி
Story first published: Friday, June 19, 2026, 12:50 [IST]
Other articles published on Jun 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+