Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதெல்லாம் கேட்க முடியாது”.. விராட் கோலி எடுத்த பிடிவாதமான முடிவு.. தென்னாப்பிரிக்க டூரில் பின்னடைவு

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Recommended Video

Virat Kohli, No Harm In Taking Break But Timing Has To Be Better; Mohammed Azharuddin

இந்திய அணி வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஒருநாள் போட்டிக்கான அணி வெளியிடப்படவில்லை. இதில் தான் தற்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

இந்தியாவின் 50 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். கேப்டனாக விராட் கோலிக்கு தொடர விருப்பம் தெரிவித்த நிலையிலும் பிசிசிஐ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு ஒரே ஒரு கேப்டன் தான் இருக்க வேண்டும் என்ற முடிவில் ரோகித் சர்மாவை அடுத்த கேப்டனாக தேர்ந்தெடுத்தது.

கோலியின் நிலைமை

கோலியின் நிலைமை

பிசிசிஐ-ன் இந்த முடிவால் விராட் கோலி கடும் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. இதனை தெளிவாக எடுத்துக்காட்டியது கோலியின் தற்போதைய நடவடிக்கைகள். இந்திய அணி வீரர்கள் 12ம் தேதிக்குள் பயோ பபுளுக்கு வந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விராட் கோலி,கால கெடு முடிந்து பபுளுக்குள் வரவில்லை. அவரை தொடர்பு கொள்ள பிசிசிஐ அதிகாரிகள் முயன்ற போதும், மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோலியின் திடீர் அறிவிப்பு

கோலியின் திடீர் அறிவிப்பு

இந்நிலையில் குழப்பங்கள் அனைத்திற்கும் அதிரடி அறிவிப்பின் மூலம் கோலி பதில் கொடுத்துள்ளார். அதாவது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் விளையாட கோலி அதிருப்தி தெரிவித்ததாகவும், அதன் விளைவாக தான் தொடரில் இருந்து வெளியேறியதாகவும் கூறுகின்றனர்.

 மீண்டு வரும் ரோகித் சர்மா

மீண்டு வரும் ரோகித் சர்மா

இது ஒருபுறம் இருக்க, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விலகிய ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளுக்கு மீண்டும் வந்துவிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோகித்திற்கு இடதுகையில் தசைப்பிடிப்பு பிரச்னை ஏற்பட்டதால் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார். ஆனால் கோலி கலந்துக்கொள்ள மாட்டார் என்று அறிவித்தவுடன், ரோகித் சர்மா மீண்டும் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Story first published: Tuesday, December 14, 2021, 23:50 [IST]
Other articles published on Dec 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+