
8வது இடத்தில் கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ரன்களை அவர் எடுத்ததன் மூலம் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக்கை முந்தி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்தார்.

பாகிஸ்தான் - இந்தியா ஒப்பீடு
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 56 போட்டிகளில் ஆடி 4214 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 51.39. விராட் கோலி 42 போட்டிகளில் 4233 ரன்கள் எடுத்துள்ளார். கோலியின் சராசரி 65.12 ஆகும். கோலி மிஸ்பாவை முந்தியதன் மூலம் ஆசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஸ்மித் முதலிடம்
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் பட்டியலில் தென்னாபிரிக்கா அணியின் ஸ்மித் 109 போட்டிகளில் 8659 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவில் யார்?
இந்த பட்டியலில் இந்தியாவில் விராட் கோலி மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறார். இந்திய அளவில் கோலிக்கு அடுத்த இடத்தில் தோனி 60 போட்டிகளில் 3454 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாம் இடத்தில் 47 போட்டிகளில் 3449 ரன்கள் எடுத்த கவாஸ்கர் இடம் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications