Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பு பன்னிட்டேனே... "டிவிட்டராட்டி"களை தூங்க விடாமல் செய்த கோஹ்லியின் டிவிட்!

பெங்களூரு: தப்பு பன்னிட்டேன்.. இது விராத் கோஹ்லி தனது டிவிட்டர் பக்கத்தில் போட்ட ஒரு டிவிட். இதை வைத்து பரபரப்பாகி வி்ட்டது டிவிட்டர் உலகம்.

என்னாச்சு விராத், ஏன் இப்படி டல்லா பேசுறீங்க, என்ன தப்பு பண்ணினீங்க என்று கேட்டு ஆளாளுளுக்கு கோஹ்லி பக்கத்தை மொய்த்து வருகின்றனர்.

இந்த இளம் வயதிலேயே, விராத் கோஹ்லி, கிரிக்கெட்டில் பல வெற்றிகளைப் பார்தது விட்டார், சாதனைகளையும் சுவைத்து விட்டார். இதனால் அவருக்கு ரசிகர் கூட்டம் ஏராளமாக இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் உடனே அது ரசிகர்கள் மத்தியில் தீ போல பரவி விடுகிறது.

வியாழக்கிழமை காலையில்

வியாழக்கிழமை காலையில்

இப்படித்தான் வியாழக்கிழமை காலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்ட ஒரு டிவிட்டுக்கு ஏகப்பட்ட பதில்கள், விளக்கங்கள், கவலைகள் வந்து குவிந்து விட்டன.

இரண்டே டிவிட்டுகள்தான்

இரண்டே டிவிட்டுகள்தான்

இரண்டு டிவிட்டுகள்தான் கோஹ்லி போட்டிருந்தார். அதுதான் பரபரப்பைக் கிளப்பி விட்டு விட்டது.

நான் என்ன பண்ணிட்டேன்

நான் என்ன பண்ணிட்டேன் என்பது முதல் டிவிட். உடனே பலரும் என்னாச்சு கோஹ்லி, என்ன பண்ணிட்டீங்க என்று கேட்டுத் துளைத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏதோ தப்பு பண்ணிட்டேன்

அடுத்து ஏதோ தப்பாக செய்து விட்டேன் என்று நினைக்கிறேன் என்று இன்னொரு டிவிட்டைப் போட்டார் கோஹ்லி. இதுவும் காட்டுத் தீ போல கருத்துக்களைக் கவர்ந்து விட்டது.

என்னாச்சு

ஏன் என்னாச்சு, என்ன தப்பு பண்ணீங்க, உண்மையிலேயே நீங்கதான் டிவிட் பண்றீங்களா என்று கேட்டு வரிசை கட்டி வந்து விட்டனர் ரசிகர்கள்.

ஆமா தப்புதான் பண்ணிட்டீங்க

ஒருவர், I think I may have done something wrogn today (sic)" என்று கோஹ்லி போட்டிருந்த டிவிட்டைக் குறிப்பிட்டு, ஆமாம், ராங் என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங்கை தப்பாகத்தான் போட்டு விட்டீர்கள் என்று நக்கலடித்துள்ளார்.

ஹேக் பண்ணிட்டாங்களோ

ஹேக் பண்ணிட்டாங்களோ

இன்னொருவரோ ஒரு வேளை கோஹ்லியின் பக்கத்தை யாரேனும் ஹேக் பண்ணியிருப்பாங்களோ என்று கவலை தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலியா பறக்கப் போகும் நேரத்தில்

ஆஸ்திரேலியா பறக்கப் போகும் நேரத்தில்

இந்திய கிரிக்கெட் அணி நாளை இரவு அல்லது சனிக்கிழமை காலை ஆஸ்திரேலியா கிளம்பவுள்ளது. இந்த நேரம் பார்தது இப்படி டிவிட்டைப் போட்டு குட்டையைக் குழப்பியிருக்கிறார் கோஹ்லி.

ஒழுங்கா விளையாடப் பாருங்க

ஒழுங்கா விளையாடப் பாருங்க

இப்படித்தான் இங்கிலாந்து தொடருக்கு முன்பு பயங்கரமாக பேசி வந்தார் கோஹ்லி. ஆனால் அங்கு போய் முட்டை முட்டையாக வாங்கித் தின்றார். இப்போதும் ஆஸ்திரேலியா கிளம்பும் முன்பாகவே நான் தப்பு செய்திட்டேனே என்று அபசகுணமாக ஆரம்பித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் போய் என்ன வாங்கப் போகிறாரோ....!

Story first published: Thursday, November 20, 2014, 12:40 [IST]
Other articles published on Nov 20, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+