Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்தில் மொக்கை வாங்கிய விராட் கோலி.. மரணமாக கலாய்த்த சுனில் சேத்திரி.. இது தேவையா? - வீடியோ!

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோலி திடீரென கால்பந்துக்கு மாறி அது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ள நிலையில் கேப்டன் விராட் கோலி கால்பந்து பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

அதற்காக தற்போது கால்பந்தில் 'கிராஸ் பார் சேலஞ்ச்' செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலியும் கால்பந்தும்

கோலியும் கால்பந்தும்

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். அவர் கிரிக்கெட்டில் மட்டும் சிறப்பாக செயல்படக்கூடியவர் அல்ல கால்பந்தும் விராட் கோலிக்கு அத்துபடி ஆகும். கால்பந்து மீதான தனது காதலை அவர் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

வைரல் வீடியோ

இந்நிலையில் அதனை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கால்பந்து கோல் போஸ்டுக்கு எதிரே நிற்கும் விராட் கோலி, கிராஸ் பார் சேலஞ்ச் செய்ய ஆர்வமாக பந்தை தட்டிக்கொடுக்கிறார். ஆனால் கோலி வைத்த குறி தவறியது. இதற்கு அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்களுக்கு ரசிகர்கள் கமெண்ட்களை பறக்க விட்டு வருகின்றனர்.

சுனில் சேத்திரி பதில்

சுனில் சேத்திரி பதில்

இந்த வீடியோவுக்கு தற்போது இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்திரியும் பதில் கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் கால்பந்து பயிற்சிக்கான முழு கட்டண விவரங்களை உங்களுக்கு அனுப்பவா? அல்லது தவனை முறையில் கட்டணத்தை செலுத்துகிறீர்களா கோலி என கிண்டலாக கேட்டுள்ளார். விராட் கோலி மற்றும் சுனில் சேத்திரி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அடிக்கடி இருவரும் சமூக வலைதளங்களில் உரையாடிக்கொள்வதும் உண்டும்.

 பிசிசிஐ பபுள்

பிசிசிஐ பபுள்

இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக தயாராகி வருகிறது. இந்த போட்டி ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்காக பிசிசிஐ ஏற்படுத்தியுள்ள பபுளில் விராட் கோலி நேற்று தான் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 26, 2021, 17:52 [IST]
Other articles published on May 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+