Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த போட்டோ-ல இருக்கிறது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்? 2 ரன்னா திருடுவார்.. கோலி கலாட்டா!

Recommended Video

Kohli shares a picture in twitter | ட்விட்டரில் கோலி வெளியிட்ட புகைப்படம்

கொல்கத்தா : தொடர்ந்து பல்வேறு தொடர்களில் விளையாடிவரும் விராத் கோலி தன்னுடை டிவிட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களை சந்திப்பதையும் சளைக்காமல் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள கோலி, தன்னுடைய பார்ட்னர், தொடர்ந்து கிரைமில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பவுண்டரியில் பீல்டிங் செய்யும் எதிரணி வீரர்களிடம் இருந்து இரண்டு ரன்களை திருடுவதை வாடிக்கையாக தன்னுடைய பார்ட்னர் கொண்டுள்ளதாகவும் அவர் தன்னுடைய கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

 டிவிட்டரில் தொடர் பதிவுகள்

டிவிட்டரில் தொடர் பதிவுகள்

தன்னுடைய சிறப்பான விளையாட்டு மூலம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட விராத் கோலி, தொடர்ந்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருபவர். அவர் வெளியிடும் பதிவுகள் உடனுக்குடன் ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளும்.

 ஏராளமான ஷேர்கள்

ஏராளமான ஷேர்கள்

இதனிடையே இருதினங்களுக்கு முன்பு தன்னுடைய வயிற்றின் தசைகள் குறித்து வொர்க்-அவுட் வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவு, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. இதுவரை இந்த வீடியோவை 84 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 43 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.

ஊகம் செய்ய கோரிக்கை

இந்நிலையில் தன்னுடைய பார்ட்னர் இன் கிரைம் என்று தெரிவித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மறுபக்கம் திரும்பியபடி அந்த புகைப்படத்தில் உள்ளவர் யார் என்று ஊகம் செய்யவும் கோலி, தன்னை பின்தொடர்பவர்களை கேட்டுக் கொண்டார்.

 இரண்டு ரன்களை திருடுபவர்

இரண்டு ரன்களை திருடுபவர்

பவுண்டரியில் நின்று பீல்டிங் செய்யும் எதிரணி பீல்டர்களிடம் இரண்டு ரன்களாக திருடுபவர் என்று தன்னுடைய பார்ட்னர் குறித்து அவர் தெரிவித்துள்ளார். இதைக் கொண்டு அந்த நபர் யார் என்று ரசிகர்களிடம் அவர் கேட்டார்.

 15,000 பகிர்வுகள், 8,400 கமெண்ட்டுகள்

15,000 பகிர்வுகள், 8,400 கமெண்ட்டுகள்

இதனிடையே, இந்த பதிவு செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே 1,26,000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் 15,000 பேர் பகிர்ந்துள்ளனர். 8,400 பேர் கமெண்ட் செய்து டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.

 மகேந்திரசிங் தோனி

மகேந்திரசிங் தோனி

கோலிக்கு அந்தப் பக்கமாக அந்த புகைப்படத்தில் திரும்பியிருப்பவர் மகேந்திர சிங் தோனி என்று ரசிகர்கள் ஊகம் செய்துள்ளனர். எதிரணி பீல்டர்களிடம் இரண்டு ரன்களை திருடுபவர் என்ற கேப்ஷன், இதை ஊகம் செய்ய அவர்களுக்கு உதவி புரிந்துள்ளது.

 மேற்கிந்திய தீவு தொடரில் பங்கேற்பு

மேற்கிந்திய தீவு தொடரில் பங்கேற்பு

தன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை தோனி மேற்கொள்வார் என்று பல்வேறு ஊகங்கள் வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவர் ராஞ்சியில் பயிற்சி மேற்கொண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Story first published: Thursday, November 21, 2019, 10:30 [IST]
Other articles published on Nov 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+