For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலிக்கு இவ்வளவு கொடுமையா??.. கேப்டன் பதவி டூ சாதாரண வீரர் என்ற அனுபவம்.. வெளிப்படை பேச்சு!

மும்பை: கேப்டனாக செயல்பட்ட பின்னர் மீண்டும் ஒரு வீரராக அணியினருடன் சேர்ந்து செயல்படுவது மிகவும் சிரமமாக இருந்ததாக விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார். கேப்டன்சி சென்ற போது இருந்த மனநிலை குறித்தும் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

2023ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என இந்திய அணி பலகட்ட பயிற்சிகளை பெற்று வருகிறது.

இதில் ரசிகர்களுக்கு இருக்கும் நிம்மதியான விஷயம் என்னவென்றால் விராட் கோலியின் கம்பேக் தான். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக விமர்சனங்களை சந்தித்து வந்த கோலி, தற்போது அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார்.

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

எம்.எஸ்.தோனிக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த போதும், அவரின் செயல்பாட்டில் குறைகள் இருந்தன. இதனால் அவர் கேப்டன்சியில் இருந்து விலகினார். 2021ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் டி20 கேப்டன்சியில் இருந்தும், 2022ம் ஆண்டு தொடக்கத்திலேயே டெஸ்ட் கேப்டன்சியில் இருந்தும் விலகினார். ஒருநாள் கிரிக்கெட்டிற்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

 விராட் கோலி கருத்து

விராட் கோலி கருத்து

இந்நிலையில் அந்த மாற்றம் எப்படி இருந்தது என விராட் கோலி பேசியுள்ளார். அதில், எனக்கு எந்த சிரமும் இல்லை என்று கூறுவது நிச்சயமாக பொய்யாக தான் இருக்கும். நாம் தான் இனி பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு சென்றவுடன் மீண்டும் பழைய நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பது சாதாரணம் அல்ல. நிறைய நேரம் அதற்கு எடுத்துக்கொண்டது. நமக்கு வேண்டாம் என முடிவெடுத்த பின்னர் அதனை யோசித்துக்கொண்டேவும் இருக்கக்கூடாது.

நிதானம் தேவை

நிதானம் தேவை

சில சமயங்களில் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப அது செய்யலாம் இது செய்யலாம் என்று தோன்றும். அதன்பின்னர் திட்டம் ஏற்கனவே போடப்பட்டு விட்டது. நாம் நிதானமாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன். கடினமான சூழல்களில் நான் எப்போதுமே முடிவெடுக்க அங்கு இருந்துள்ளேன். தற்போதெல்லாம் புரிந்துக்கொண்டு கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.

ஆர்சிபி அணி கேப்டன்சி

ஆர்சிபி அணி கேப்டன்சி

ஆர்சிபி அணி குறித்து பேசிய கோலி, பல சமயங்களில் நான் டூப்ளசிஸிடம் சென்று, அந்த விஷயத்தை செய்தால் சரியாக இருக்கும் என அறிவுரை கூறுவேன். சில சமயங்களில் அவர் ஏற்றுக்கொள்வார். சில சமயங்களில் செய்ய விருப்பமில்லை என சரியான காரணத்துடன் கூறிவிடுவார். அதுவும் மிகவும் மரியாதையாக, காயம் ஏற்படுத்தாமல் கூறுவார் என கோலி கூறினார்.

Story first published: Monday, February 27, 2023, 14:13 [IST]
Other articles published on Feb 27, 2023
English summary
Team India star player Virat kohli shares his experience on Captain to player transition, here is the full speech
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+