Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க சிரிப்பு வேணும்னா போலியா இருக்கலாம்... ஆனா நாங்க குரங்கு இல்ல... விராட் பதிவு

மும்பை : தொடர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிஇந்த லாக்டவுன் நேரத்தில் அது தொடர்பாக தொடர்ந்து பதிவுகள் போட்டவண்ணம் உள்ளனர்.

Recommended Video

I'm not Fake | Virat Kholi Anushka Sharma Adorable Selfie

பரபரப்பாக இருக்கும் நேரத்திலேயே சமூகவலைதளத்தில் தொடர் பதிவுகளை போடும் தம்பதி விராட் மற்றும் அனுஷ்கா.

Virat Kohli Shares New Picture With Anushka Sharma On Instagram

தற்போது வீட்டிற்குள்ளேயே 21 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ள இந்த நேரத்தை தவறவிடுவார்களா என்ன.. தினமும் ஒரு டிவீட்டை போட்டு தாக்குகின்றனர். அதில் முக்கியமாக வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தும் டிவீட்டுகள் அதிகமாக உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளுக்குள் முடங்கியுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும்வகையில் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இந்திய வீரர்களும் விதிவிலக்கில்லை. இதில் முக்கியமாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி அதிகளவில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

தினமும் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ விராட் கோலி அல்லது அனுஷ்கா சர்மா வெளியிட்டு வருகின்றனர். இவர்களின் இந்த பதிவுகளுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் லைக்குகளையும், பகிர்வுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் பெற்ற தோல்வியை அடுத்து, சிறிது நாட்களுக்கு பதிவுகளை இடுவதை தவிர்த்துவந்த விராட் கோலி, தற்போது மீண்டும் துவங்கியுள்ளார்.

நேற்றைய தினம் அனுஷ்கா சர்மா, கோலியுடன் தான் இணைந்துள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, வாழ்க்கையில் தன்னுடைய தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மிக நீண்ட பதிவு அது. இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இன்று வெளியிட்டுள்ள விராட் கோலி, வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பதை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு அவர் வெளியிட்டுள்ள கேப்ஷனில், தங்களுடைய சிரிப்பு வேண்டுமானால் போலியாக இருக்கலாம். ஆனால் அங்கங்கே திரிந்து கொண்டிருக்க தாங்கள் குரங்கல்ல என்னும்படியாக குரங்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-eRoeGFSk3/?utm_source=ig_embed

தொடர்ந்து மத்திய அரசின் ஊடரங்கிற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்துவரும் விராட் கோலி, பிரதமர் கேர் நிவாரண நிதிக்கு நிதியுதவியும் அளித்துள்ளார்.

Story first published: Thursday, April 2, 2020, 20:32 [IST]
Other articles published on Apr 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+