Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு நீ... உனக்கு நான்... ஏட்டிலே எழுதினான்... 3வது திருமண நாள்... கோலி உற்சாக பதிவு!

சிட்னி : விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி தங்களது மூன்றாவது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து இருவரின் திருமண கொண்டாட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மூன்று வருடங்கள் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் இணைந்திருப்போம் என்று கேப்ஷனையும் வெளியிட்டுள்ளார்.

தனித்தனியாக கொண்டாட்டம்

தனித்தனியாக கொண்டாட்டம்

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவருக்கும் கடந்த 2017 டிசம்பர் 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அவர்கள் தங்களது 3வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் பங்கேற்பதற்காக விராட் தற்போது சிட்னியில் உள்ள நிலையில், இருவரும் இணைந்து இல்லை.

நாடு திரும்பும் விராட்

நாடு திரும்பும் விராட்

ஆயினும் வரும் 17ம் தேதி துவங்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பவுள்ளார் விராட் கோலி. இவர்களுக்கு வரும் ஜனவரி மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளதாக சமூகவலைதளம் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

வாழ்நாள் முழுவதும் இணைந்திருப்போம்

வாழ்நாள் முழுவதும் இணைந்திருப்போம்

இந்நிலையில் இன்று தனது மூன்றாவது திருமண நாளையொட்டி இருவரும் இணைந்திருக்கும் அழகான திருமண நாள் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விராட் கோலி. மேலும் மூன்று வருடங்கள் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் இணைந்திருப்போம் என்று கவிதை நடையில் கேப்ஷனையும் வெளியிட்டுள்ளார்.

இந்தியா திரும்பும் விராட்

இந்தியா திரும்பும் விராட்

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஒருநாள் போட்டி தொடரை கைநழுவியும் டி20 தொடரை கைப்பற்றியும் உள்ளது. இந்நிலையில் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வரும் 17ம் தேதி அடிலெய்டில் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் பங்கேற்கவுள்ள விராட், இதையடுத்து நாடு திரும்புகிறார்.

Story first published: Friday, December 11, 2020, 10:31 [IST]
Other articles published on Dec 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+