Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கெங்கு நீ சென்ற போதும்.... அனுஷ்காவின் நினைவுகளுடன் நடமாடும் கோஹ்லி!

பெங்களூரு: ஐ.பி.எல் 8 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பெங்களூருவிற்கு வந்துள்ள விராட் கோஹ்லி தனது மனம் கவர்ந்த காதலி அனுஷ்காவிற்கு கொடுப்பதற்காக அழகான ஹேன்ட் பேக் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலில் விழுந்துள்ள விசயம் அனைவருக்கும் தெரிந்ததே. என்னதால் இவர்களின் காதலை வலைத்தளங்களில் கலாய்து எடுத்தாலும், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் எங்கு போனாலும் அனுஷ்காவுடன் கைகோர்த்துக்கொண்டு போகிறார் விராட்கோஹ்லி.

காதலிக்கு பரிசு

காதலிக்கு பரிசு

அனுஷ்கா வீசிய பந்தில் மனுஷன் கிளீன் போல்ட் ஆகிவிட்டார் என்கின்றனர். அதற்கு காரணம் அனுஷ்காவின் எளிமையும், நேர்மையும்தான் என்கின்றனர் விராட்டிற்கு நெருக்கமானவர்கள். எனவேதான் கிரிக்கெட் விளையாட வந்த இடத்தில் கூட காதலிக்கு பரிசளிக்க அழகான கை பை ஒன்றை வாங்கிச் சென்றாராம்.

பாம்பே வெல்வெட் படத்தில்

பாம்பே வெல்வெட் படத்தில்

இது ஒருபுறம் இருக்க அனுஷ்கா, ரன்பீர் கபீர் நடித்துள்ள பாம்பே வெல்வெட் படத்தில் முதன் முறையாக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனுராக் காஸ்யப் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மும்பை நகரம்

மும்பை நகரம்

1950கள் காலத்திய பழைய பாம்பேயை அப்படியே இப்படத்தில் கண்முன் காட்டப்போகிறார்கள். இப்படத்தைப் பொறுத்தவரை பம்பாய் நகரமும் ஒரு கதாபாத்திரமாக உலாவருகிறது. கியான் பிரகாஷ் என்ற எழுத்தாளரின் ‘மும்பை பேபிள்ஸ்' என்ற வரலாற்று நூலைத்தான் அனுராக் காஸ்யப் திரைக்கதையாக மாற்றியுள்ளாராம்.

இலங்கை போன கோஹ்லி

இலங்கை போன கோஹ்லி

இந்தப்படத்தில் 1960களில் வாழ்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக நடித்துள்ளாராம் கோஹ்லி. இதற்காக இலங்கைக்கு சின்னதாக ஒரு ட்டிரிப் போய்விட்டு வந்தாரம் கோஹ்லி.

ஷாம்பு விளம்பரத்தில் ஜோடி

ஷாம்பு விளம்பரத்தில் ஜோடி

ஷாம்பு விளம்பரத்தில் அனுஷ்கா ஷர்மா உடன் இணைந்து நடித்த கோஹ்லி தற்போது தனது காதலி நடிக்கும் பாலிவுட் படத்திலேயே அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 29, 2015, 15:23 [IST]
Other articles published on Apr 29, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+