கோஹ்லியைக் கேப்டனாக்க இப்ப என்ன அவசரம்.. கட்டையைப் போடும் கவாஸ்கர்
டெல்லி: இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 போட்டிகளுக்கும் விராத் கோஹ்லியை கேப்டனாக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளதற்கு மாறாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
கோஹ்லியை கேப்டனாக்க அவசரம் காட்டத் தேவையில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது விராத் கோஹ்லி சுப்ரீம் பார்மில் உள்ளார். அவரை அவசரப்பட்டு கேப்டனாக்கி அவரது பார்மைக் கெடுத்து அணிக்குப் பாதகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பது கவாஸ்கரின் கருத்தாகும்.

டெஸ்ட் கேப்டன்
தற்போது விராத் கோஹ்லி டெஸ்ட் கேப்டனாக உள்ளார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு டோணி கேப்டனாக தொடர்கிறார்.

அவசரம் தேவையில்லை
இதுகுறித்து டிவி சானல் ஒன்றுக்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில், விராத் கோஹ்லியை கேப்டனாக்க அவசரம் காட்டக் கூடாது. அவர் நல்ல பார்மில் உள்ளார். அவரது பார்முக்கு பாதகம் ஏற்பட்டு விடக் கூடாது.

டைம் இருக்கு
2019ம் ஆண்டுதான் உலகக் கோப்பைப் போட்டி வருகிறது. அதற்கு காலம் நிறைய உள்ளது. எனவே இப்போதே கோஹ்லியை கேப்டனாக்க வேண்டிய அவசியம் இல்லை. அவசரமும் இல்லை. இன்னும் அவர் கொஞ்சம் பக்குவப்பட்டும் என்றார் கவாஸ்கர்.

செம பார்ம்
நடப்பு ஐபிஎல் தொடரில் கோஹ்லி பயங்கரமான பார்மில் உள்ளார். 2 சதம் போட்டுள்ளார். 500 ரன்களைத் தாண்டிப் போய் விட்டார், தொடர்ந்து அசத்தலாக ஆடி வருகிறார்.


Click it and Unblock the Notifications