Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன பேச்சு இது.. சச்சினோட எப்படி கோஹ்லியை ஒப்பிடலாம்.. சீறி வரும் ஷேவாக்

மும்பை: சச்சின் டெண்டுல்கருடன் விராத் கோஹ்லியை ஒப்பிடுவது நியாயமே இல்லாதது என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.

சச்சின் வேறு, கோஹ்லி வேறு. யாரையும், யாருடனும் ஒப்பிடக் கூடாது என்றும் ஷேவாக் கூறியுள்ளார். சமீப காலமாக விராத் கோஹ்லி நல்ல பார்மில் இருந்து வருகிறார்.

குறிப்பாக நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைப் போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் அவர் ரன்களைக் குவித்து வருகிறார். இந்த நிலையில் கோஹ்லியை சச்சினுடன் ஒப்பிட்டு பேச்சுக்கள் வருவதற்கு ஷேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஒப்பிடக் கூடாது

ஒப்பிடக் கூடாது

இதுகுறித்து ஷேவாக் கூறுகையில், யாரையும், யாருடனும் ஒப்பிடக் கூடாது. ஒப்பிடவும் முடியாது. மேதைகளின் காலம் வேறு, நாம் ஆடும் காலம் வேறு.

அது தப்பு

அது தப்பு

என்னைப் பலர் சச்சினுடன் ஒப்பிட்டனர். விவ் ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிட்டனர். அது தவறு, நியாயமற்றது. நான் ஆடிய காலம் வேறு, அவர்கள் ஆடிய காலம் வேறு.

நியாயமில்லை

நியாயமில்லை

எனவே சச்சினுடன் விராத் கோஹ்லியை ஒப்பிடுவதும் தவறுதான். அவர்கள் வேறு வேறு. இருவரையும் ஒப்பிடுவது நியாயமாக இருக்காது.

அபாயகரமானவர்

அபாயகரமானவர்

இப்போது நிறைய ஆட்டக்காரர்கள் உள்ளனர். அவர்களில் கோஹ்லி அபாயகரமானவர். ஏபி டிவில்லியர்ஸ் உள்ளார், வார்னர் உள்ளார். விராத்தும் உள்ளார். ஆனால் எல்லோரையும் விட விராத் அபாயகரமானவராக திகழ்கிறார்.

அசரடிக்கிறது

அசரடிக்கிறது

விராத் விளையாடும் விதம், ரன் குவிக்கும் வேகம் அசரடிக்கிறது. இதுவரை அவர் 2 சதங்களையும் போட்டுள்ளார். இது சாதனையாகும் என்றார் ஷேவாக்.

Story first published: Thursday, May 12, 2016, 12:11 [IST]
Other articles published on May 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+