For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம விராட் கோலியா இது??.. பயிற்சியின் போது வெறியாட்டம்.. அதீத மகிழ்ச்சியில் ரோகித் சர்மா - வீடியோ!

துபாய்: ஆசிய கோப்பை தொடருக்காக விராட் கோலி மேற்கொண்ட பயிற்சியை பார்த்து ரோகித் சர்மா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Recommended Video

India vs Pakistan: Asia Cup-ல் நடந்த Epic Clashes | Aanee's Appeal

6 நாடுகள் மோதும் ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக சமீபத்தில் அமீரகம் சென்றடைந்த இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்திய அணியை பொறுத்தவரையில் விராட் கோலியின் மீது தான் ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. கடந்த 1000 நாட்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ள கோலி, கடைசியாக விளையாடிய இங்கிலாந்து தொடரில் அதிகபட்சமாக 20 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரை புறக்கணித்த அவர் நீண்ட ஓய்வுக்கு பின் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கவுள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோலி தீவிர பயிற்சி

கோலி தீவிர பயிற்சி

இந்நிலையில் பயிற்சி முகாமில் விராட் கோலி காட்டிய அதிரடியால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலமாக விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறி வருகிறார். எனவே வலைபயிற்சியில் இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களான அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோரின் பவுலிங்கை பொளந்துக்கட்டினார்.

ஷாட் செலக்‌ஷன்

ஷாட் செலக்‌ஷன்

வழக்கமாக ட்ரைவ் ஷாட்களை விளையாடும் கோலி, அவுட்சைட் பந்துகளை தைரியமாக களமிறங்கி ஸ்ட்ரைட்டில் சிக்ஸர்களை அடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ஆசிய கோப்பையில் இருந்து விராட் கோலி "ஸ்பெஷல் கோல்ட் விசார்ட் குவாலிட்டி" என்ற வகை பேட்டை பயன்படுத்தவுள்ளார். இதில் தான் தற்போது பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

ரோகித் மகிழ்ச்சி

விராட் கோலியின் ஷாட் செலக்‌ஷன் மற்றும் தைரியத்தை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வழக்கமாக பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் கோலி, இந்த முறை அந்த அணிக்கு எதிராகவே கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, August 25, 2022, 11:57 [IST]
Other articles published on Aug 25, 2022
English summary
Virat kohli batting practice ahead of Asia cup 2022 ( ஆசிய கோப்பை தொடருக்காக விராட் கோலி பயிற்சி ) ஆசிய கோப்பை தொடருக்காக விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.,
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+