Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளம்பர வருமானங்களில் டோனி, சச்சினை முந்துகிறார் விராட் கோலி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விராட்ஹோக்லி விளம்பர ஒப்பந்தங்களில் தனது சீனியர்கான டோணி, சச்சினை பின்னுக்குத்தள்ளிவிட்டு முன்னேறத் தொடங்கியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் திறமையை வெளிப்படுத்தி வருவதால் டோணிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு ஹோக்லிக்கே அதிகம் உள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதனால் விளம்பர வாய்ப்பும் ஹோக்லியை நோக்கி அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன. அடிடாஸ் நிறுவனத்துடன் ரூ.30 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளாராம் ஹோக்லி.

குவியும் விளம்பரங்கள்

குவியும் விளம்பரங்கள்

கிரிக்கெட் வீரர்கள் நன்றாக விளையாடி ஸ்கோர் செய்தால் அவர்களை நோக்கி அதிக அளவில் விளம்பர நிறுவனங்கள் வரத்தொடங்கும். ஹோக்லிக்கு விளையாட்டுத் திறனோடு அழகும் ப்ளஸ் பாயிண்ட்டாக இருப்பதால் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் குவிகிறது.

அடிடாஸ் ஒப்பந்தம்

அடிடாஸ் ஒப்பந்தம்

தற்போது ஆண்டுக்கு 10 கோடி வருமானம் தரக்கூடிய ஜெர்மனியின் மாபெரும் விளையாட்டு நிறுவனமான அடிடாசின் விளம்பர ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்த நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் காலணிகள் விளம்பரங்களில் இன்னும் மூன்று வருடங்களுக்கு விராட் கோலி தோன்றுவார்.

சச்சினிடமிருந்து

சச்சினிடமிருந்து

அடிடாசின் விளம்பரங்களில் வரும் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்வின் முடிவுக் காலத்தில் இருப்பது இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

டயர் நிறுவனதிலும்

டயர் நிறுவனதிலும்

இதுமட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் வா ஆகியோரை தங்களது நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரத் தூதுவர்களாக கொண்டுள்ள பிரபல டயர் நிறுவனம் ஒன்று 6.5 கோடிக்கு தற்போது விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோப்பு, கிரீம், குளிர்பானம்

சோப்பு, கிரீம், குளிர்பானம்

ஏற்கனவே, சோப்பு போட்டு குளிப்பது தொடங்கி, கார் விளம்பரம், நறுமணத் தைலம், சேவிங் கிரீம் என 13 நிறுவன விளம்பரங்களில் விராட் கோலி தோன்றுகிறார்.

விளம்பரத்திற்கு தடையில்லை

விளம்பரத்திற்கு தடையில்லை

கடந்த 2008 ஆம் ஆண்டு விராட் கோலி நைக் அமெரிக்க நிறுவனத்துடன் ஐந்து வருட ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், இது சுமூகமாக இல்லாததினால் இந்த நிறுவனம் கோலி தங்களுடைய ஒப்பந்தத்தை இடையில் மறுத்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இதனை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், விராட் கோலிக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கி, அவர் மற்ற விளையாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது.

விளம்பர வருமானம் 400 கோடி

விளம்பர வருமானம் 400 கோடி

இதனையடுத்து புதிய விளம்பரங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஹோக்லி. இந்த வருட இறுதியில் 25 வயதினைப் பூர்த்தி செய்யும் விராட் கோலியின் சென்ற வருட விளம்பர வருமானமே 40 கோடி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

டோணியை ஒவர்டேக்

டோணியை ஒவர்டேக்

தற்போது இந்தப் புதிய ஒப்பந்தங்களின் மூலம் அவர் இந்தியக் கேப்டன் டோனி, சச்சின் வருமானங்களையே முந்திவிடுவார் என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, September 27, 2013, 12:25 [IST]
Other articles published on Sep 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+