For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருக்கும் தெரியாமல் வம்பிழுத்த கோலி...புன்னகையோடு சமாளித்த ஜோ ரூட்...4வது டெஸ்ட் சுவாரசியம்

சௌதாம்ப்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்ய வந்த ஜோ ரூட், அருகே சென்ற விராட் கோலி, ஜோ ரூட்டை லேசாக வம்பிழுத்து இருக்கிறார். அதற்கு ஒரு புன்னகையோடு பதில் அளித்து சமாளித்து இருக்கிறார் ஜோ ரூட். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடந்த சில மாதங்களாக களமிறங்கி வரும் மூன்றாம் இடத்தில், மொயீன் அலியை பேட்டிங் செய்ய வைத்தார். அதன் பின் நான்காவதாக ஜோ ரூட் களமிறங்கினார்.

Virat kohli silently sledge Joe Root on his second innings arrival at no.4

இதைக் கண்ட இந்திய கேப்டன் விராட் கோலி, ஜோ ரூட் அருகில் பீல்டிங் நிற்க வருவதைப் போல வந்தார். அருகே வந்து, "எப்போதும் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்துவிட்டீர்கள் போல. மூன்றாம் இடத்தை விட்டு ஓடி விட்டீர்களே!" என கேலியாக கேட்டுள்ளார்.

அதாவது ஜோ ரூட் நீண்ட காலமாகவே நான்காம் இடத்தில் தான் பேட்டிங் செய்து வந்தார். அதில் தான் அவரது ஆவரேஜ் அதிகம். அவருக்கு மிகவும் பிடித்த பேட்டிங் இடம் அதுதான். எனினும், மூன்றாம் இடத்திற்கு சரியான பேட்ஸ்மேன் அமையாததால், இங்கிலாந்து நிர்வாகம் இவரை மூன்றாம் இடத்தில் ஆட வலியுறுத்தி உள்ளது. அந்த இடத்தில் சில மாதங்களாக ஆடி வரும் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை.

இந்த நிலையில், தனக்கு பிடித்த நான்காம் இடத்தில் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வரவே, அதை "மூன்றாம் இடத்தை விட்டு ஓடி விட்டீர்களே" கிண்டல் செய்துள்ளார் கோலி. இதை சொல்லிவிட்டு மீண்டும் தன் பீல்டிங் இடத்தில் சென்று நின்று கொண்டார் விராட் கோலி.

கோலியின் கிண்டலுக்கு ஒரு புன்னகையோடு பதில் சொல்லி நிறுத்திக் கொண்டார் ஜோ ரூட். இந்த இன்னிங்க்ஸில் ஜோ ரூட் 48 ரன்கள் எடுத்தார். அனாவசியமான முறையில் ஸ்டோக்ஸ் செய்த தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

Story first published: Sunday, September 2, 2018, 16:22 [IST]
Other articles published on Sep 2, 2018
English summary
Virat kohli silently sledge Joe Root on his second innings arrival at no.4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+