Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்துக்கு 'சிலிப்' ஆனார் கோஹ்லி!

துபை: ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராத் கோஹ்லி 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இந்திய அணி கேப்டன் டோணி தமது 6வது இடத்தை தக்க வைத்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமான (ஐசிசி) ஒருநாள் போட்டி வீரர்களின் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

Virat Kohli

இதில் தொடர்ந்து முதலிடத்தில் தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் இருந்து வருகிறார். 2வது இடத்துக்கு தென்னாப்பிரிக்காவின் ஆம்லா முன்னேறியுள்ளார். 2வது இடத்தில் இருந்த கோஹ்லி 3வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

இருப்பினும் ஆம்லாவுக்கும் கோஹ்லிக்கும் 2 புள்ளிகள் வித்தியாசம்தான் என்பதால் விரைவில் நடைபெற இலங்கைக்கு எதிரான போட்டிகள் மூலம் மீண்டும் 2வது இடத்துக்கு முன்னேறுவார் எனத் தெரிகிறது.

பந்துவீச்சில் இந்தியாவின் ஜடேஜா 6வது இடத்திலும் புவனேஷ்குமார் 7வது இடத்திலும் இருக்கின்றனர்.

Story first published: Tuesday, October 28, 2014, 16:35 [IST]
Other articles published on Oct 28, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+