Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புகழுக்காக அலைவது ஒரு வியாதி.. இந்தியா, இலங்கை தொடர் முன்பு கோலி போட்ட பதிவு.. யாருக்கு சொல்றாரு?

மும்பை : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் பத்தாம் தேதி தொடங்கும் நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

அப்போது சூரியகுமார் யாதவை பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இனி சூரியகுமார் யாதவை பேட்டிங் வரிசையில் நம்பர் மூன்றாம் இடத்தில் தான் களம் இறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 கம்பீர் பேச்சு

கம்பீர் பேச்சு

ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி என அனைத்திலும் சூரியகுமார் யாதவ் நடு வரிசையில் விளையாட வேண்டும். இனி டி20 கிரிக்கெட்டில் சூரியகுமாரி தவிர வேறு யாரும் நம்பர் மூன்றாம் இடத்தில் விளையாட கூடாது என்று விராட் கோலியை ஓரம் கட்டும் வகையில் கம்பீர் பேசினார். பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய ஆட்டத்தில் விராட் கோலி அடித்து தான் இந்தியா வெற்றி பெற்றது.

புகழை தேடுவது வியாதி

புகழை தேடுவது வியாதி

இதனால் விராட் கோலியை அணியை விட்டு நீக்க முடியாது என்று கிரிக்கெட் ரசிகர்களும் பலரும் கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் விராட் கோலி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் புகழை தேடுவது ஒரு வியாதி. ஒரு நாள் அந்த வியாதியில் இருந்து விடுதலை பெற வேண்டும். புகழ் குறித்த ஆசையும் இருக்கக் கூடாது.

 இன்ஸ்டா ஸ்டோரி

இன்ஸ்டா ஸ்டோரி

புகழ் என்பது தேவையே இல்லை. அதற்கு பதில் வாழ்க்கையை நாம் அனுபவித்து வாழ வேண்டும். சாதாரணமாக இருப்பது போதுமானது என்று விராட் கோலி பிரபல நடிகர் இர்ஃபான் பேசிய வார்த்தைகளை தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் வைத்திருந்தார். இதனை விராட் கோலி கம்பிருக்கு பதிலடி தரும் வகையில் இப்படி பதிவிட்டிருக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர் .

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

ஆனால் மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபானின் பிறந்தநாள் ஜனவரி 7ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அவருடைய பேச்சை தான் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதே வாக்கியத்தை கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக விராட் கோலி உள்ளிட்ட கௌஹாத்தி சென்றுள்ளனர். மூன்று ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் இரண்டாவது போட்டியில் தான் ரோகித் சர்மா கோலி , பும்ரா ஆகிய மூன்று பேரும் இணைந்து விளையாட உள்ளனர்.

Story first published: Sunday, January 8, 2023, 21:54 [IST]
Other articles published on Jan 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+