
பெருமையான தருணம்
நிறைய கிரிக்கெட் விளையாடி விட்டேன். கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கிறது. 100 டெஸ்ட் விளையாடியது குறித்து நன்றியுணர்வோடு இருக்கிறேன். என் உடல் தகுதியை பேணி பாதுகாத்து வந்துள்ளேன். இது எனக்கும், என் குடும்பத்திற்கும், எனது பயிற்சியாளருக்கும் பெருமையான தருணம். பயிற்சியாளர் என்னை நினைத்து பெருமைப்பட்டார்.

7 இரட்டை சதம்
என்னை பொறுத்தவரை எப்போதும் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பேன். சிறு வயதில் பல இரட்டை சதம் விளாசியுள்ளேன். முதல் தர கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பே 7 இரட்டை சதம் விளாசியுள்ளேன். அணி வெற்றி பெற வேண்டும், 2 புள்ளிகள் பெற வேண்டும், முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பேன்.

உண்மையான கிரிக்கெட்
இந்த தருணங்கள் எல்லாம் நான் யார் என்பதை எனக்கே உணர்த்தியது. ரன்கள் அடிப்பது எனக்கு கொண்டாட்டமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் தான் நாம் யார் என்று என்பதை உணர்த்தும். டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தான் நாம் அதனை உணர முடியும். இதற்காகவே டெஸ்ட் கிரிக்கெட் வாழ வேண்டும். ஏனென்றால் அது தான் உண்மையான கிரிக்கெட் என்று அவர் கூறினார்.
Recommended Video

நினைவு பரிசு
விராட் கோலி 100வது டெஸ்ட்டை முன்னிட்டு பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் சார்பாக அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது. விராட் கோலி தனது 71வது டெஸ்ட் போட்டிக்காக இரண்டரை ஆண்டுகளாக காத்துள்ளார். விராட் கோலி, கடைசியாக இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடிய போது 2 இரட்டை சதம், ஒரு சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications