For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனதில் தோன்றுவதை மட்டுமே செய்வேன்.. விராட் கோலியின் தடாலடி வீடியோ.. யாருக்கான பதில்

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நயா ஷேர் என்ற வீடியோவில் தோன்றியிருக்கிறார்.ஆர் சி பி அணி பாப் பாடகர்களுடன் இணைந்து ஒரு வீடியோ தயாரித்துள்ளது.அதில் விராட் கோலி இடம்பெற்றிருக்கிறார்.

தற்போது விராட் கோலி இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் வரும் பத்தாம் தேதி தொடங்க உள்ள மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார்.

டி20 உலககோப்பையில் இல்லை

டி20 உலககோப்பையில் இல்லை

இந்த விடுமுறையை தனது மனைவியுடன் கொண்டாடிய விராட் கோலி நேற்று மும்பை வந்துள்ளார். விராட் கோலி அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்று தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த டி20 உலக கோப்பையில் சீனியர் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கோலி தடாலடி

கோலி தடாலடி

இந்த நிலையில் விராட் கோலி தோன்றிய வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி இன்று மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய விராட் கோலி களத்திலும் சரி களத்திற்கு வெளியிலும் சரி. தைரியமான முடிவை எடுப்பதில் நான் கொஞ்சமும் தயக்கம் காட்டியது கிடையாது. அப்படி தான் நான் என் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன்.

மாற்றியது கிடையாது

மாற்றியது கிடையாது

என்னுடைய இந்த குணத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். இப்போது நான் இருக்கும் இடத்திற்கு இந்த குணம் தான் காரணம். நான் டெல்லியில் சிறுவனாக இருக்கும் போது தைரியமான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் இப்போது உங்கள் முன் நான் பேசிக் கொண்டிருக்க முடியாது. இந்த பாடலை எடுக்கும் போது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் பாடலின் சூட்டிங் போது நான் நானாகவே இருந்தேன் என்று விராட் கோலி கூறினார்.

 முக்கியமான ஆண்டு

முக்கியமான ஆண்டு

டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று சலசலப்பு இருந்து வரும் நிலையில் விராட் கோலியின் இந்த பேட்டி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நடப்பாண்டில் விராட் கோலி ஐ சி சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி என இரண்டு மிகப்பெரிய தொடரில் விளையாடுகிறார். இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதனால் விராட் கோலி மீது அனைவரின் கவனமும் பெற்றுள்ளது..

Story first published: Friday, January 6, 2023, 16:21 [IST]
Other articles published on Jan 6, 2023
English summary
Virat kohli speech at Naya sheer Program about his attitude மனதில் தோன்றுவதை மட்டுமே செய்வேன்.. விராட் கோலியின் தடாலடி வீடியோ.. யாருக்கான பதில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+