மும்பை: ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே உள்ள பந்தை எதிர்கொள்வதில் தொடர்ந்து ஏற்பட்ட சிரமங்களுக்கு தீர்வு காண முடியாததால் தான் விராட் கோலி இங்கிலாந்து பயணத்திற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பனேசர், 2012ஆம் ஆண்டு இந்தியாவில் இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்ததில் முக்கிய பங்காற்றினார்.
இந்த நிலையில் விராட் கோலியை பற்றி பேசிய அவர், இங்கிலாந்தில் முந்தைய பயணங்களை விட, ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே நகரும் பந்தை எதிர்கொள்வது கோலிக்கு இம்முறை மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறினார். 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியேயான பந்து வீச்சால் கோலி திணறிய நிலையில், 2018இல் அவர் அபாரமாக மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இது குறித்து சுட்டிக்காட்டி பேசிய பனேசர், "கோலியை பொறுத்தவரை, ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே, குறிப்பாக ஐந்தாவது ஸ்டம்ப் பகுதியில், ஆஸ்திரேலியாவின் வேகமான, பவுன்ஸ் நிறைந்த பிட்ச்களில் அவர் சிரமப்பட்டார். இங்கிலாந்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பதால், அந்த ஆஃப்-ஸ்டம்பு பகுதியில் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை."
"அதனால், ஓய்வு பெற முடிவு செய்து, RCB மற்றும் இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஆற்றலை செலுத்த முடிவு செய்திருக்கலாம்," என்றார்.
2018இல் கோலி திரும்பி வந்து சிறப்பாக விளையாடியதற்கு தீர்வு கண்டிருந்தாலும், தற்போதைய அவரது வயதில் அதேபோன்று மீண்டு வருவது மிகவும் கடினம்"
"கோலி அனைத்து வடிவங்களிலும் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு அற்புதமான தூதராக இருந்தார். அவர் தனது சிறந்த பங்களிப்பை வழங்கிவிட்டதாகவும், எல்லாவற்றையும் அடைந்துவிட்டதாகவும் உணர்ந்திருக்கலாம். இப்போது இளம் வீரர்கள் முன்னேற வேண்டிய நேரம் என்று அவர் நினைத்திருக்கலாம்."
"2018இல் கோலி காட்டிய ஆட்டத்தை மீண்டும் செய்வது அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும். கடந்த 12 முதல் 18 மாதங்களாக ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே உள்ள பந்தை எதிர்கொள்வதில் அவர் சிரமப்பட்டார். நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டம்பு பகுதியில் உள்ள இந்த சிக்கலுக்கு அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இந்திய கிரிக்கெட்டுக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சிறந்தது என்று அவர் முடிவு செய்து, அடுத்த சூப்பர் ஸ்டாரை கண்டறிய விரும்புகிறார்," என்று பனேசர் கூறினார்.
கோலி மற்றும் ரோஹித் சர்மா கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், அணியில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஷுப்மன் கில் தலைமையில் மாற்று கட்டத்தில் உள்ள இந்திய அணி, ஜூன் 20 முதல் இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்து புற்கள் நிறைந்த பிட்ச்களை உருவாக்க முடியாது. ஏனென்றால், இந்திய அணிக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும், மார்க் வுட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் (இரண்டாவது டெஸ்டுக்கு தயாராகலாம்) இல்லாததால் இங்கிலாந்துக்கு பலமான பந்து வீச்சு இல்லை. முதல் டெஸ்டில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன என்று பனேசர் கூறினார்.
"இது ஒரு சுவாரசியமான தொடராக இருக்கும். இந்தியா ஸ்விங் பந்தை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பொறுத்து இருக்கும். அவர்கள் தாக்குதலாக விளையாடுவார்களா? அல்லது பாதுகாப்பாக விளையாடுவார்களா? வெப்பமான காலநிலையால், பிட்ச்கள் பிளாட்டாக இருக்கும். இங்கிலாந்து மைதான நன்மையைப் பயன்படுத்த முயலாது. அவர்கள் நடுநிலையான பிட்ச்களை உருவாக்குவார்கள்."
" சீமிங் பிட்ச்களில் 'பாஸ்பால்' உத்தியை விளையாட முடியாது. இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் பிளாட் பிட்ச்களில் விளையாட விரும்புவார்கள்.இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் வரை நீடிக்க விரும்புகிறது."
"ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று மூன்று நாள் டெஸ்ட் போட்டிகளை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்கு நன்மையை குறைக்கும் மைதானத்தை தயார் செய்யும்," என்று பனேசர் கூறினார். ஓவல் மற்றும் மான்செஸ்டரில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் பயனுள்ளதாக இருக்கலாம்.
இங்கிலாந்து முதல் டெஸ்டுக்கு 14 பேர் கொண்ட அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே சேர்த்துள்ளது,
இந்தியாவோ ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் என்ற மூன்று விருப்பங்களை தொடருக்கு கொண்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டிய பனேசர், "ஜடேஜா பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டு மற்றும் ஓவலில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாடலாம். பர்மிங்காமில் கூட பந்து சுழல்கிறது. சுந்தர் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக இருக்கலாம்," என்று கூறினார்.
பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் குறித்து பேசிய பனேசர், "அவரது பந்து வீச்சு நன்றாக உள்ளது, 10-15 ஓவர்கள் வீச முடியும். விக்கெட் தேவைப்படும்போது அவர் முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார். ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால், பந்து வீச்சில் அவர் காட்டும் தாக்கத்தை பேட்டிங்கில் உடனடியாக காட்டுவார் என்று உறுதியாகக் கூற முடியாது."
அவரது பந்து வீச்சு, பேட்டிங்கை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் தொடர் முன்னேறும்போது அவரது பேட்டிங்கில் ரிதம் கிடைக்கலாம். பந்து வீச்சில் அவர் விரைவாக தனது ரிதத்தை கண்டறிகிறார்," என்று பனேசர் தெரிவித்தார். இதே போன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து நடைபெறவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில், குல்தீப் யாதவ் ஒரு முக்கிய பந்து வீச்சாளராக திகழ்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று மேத்யூ ஹைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 அன்று லீட்ஸின் ஹெடிங்லி மைதானத்தில் துவங்கவுள்ளது.
ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய இடம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெக்-ஸ்பின்னரான குல்தீப், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்தியாவின் முக்கிய ஆயுதமாக இருக்கலாம் என்று ஹைடன் கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ஹைடன், "எதிர்நோக்கிப் பார்க்கும்போது, இந்திய அணி இங்கிலாந்தில் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், வீரர்களின் உறுதியை சோதிக்கும் ஒரு கடினமான தொடராக இருக்கும்."
"ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளரின் பங்களிப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2023 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, நாதன் லயன் காயமடைந்ததால் பாதிக்கப்பட்டதை அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். அனுபவமிக்க ஆஃப்-ஸ்பின்னரான லயன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்ததால், மீதமுள்ள தொடரில் பங்கேற்க முடியவில்லை.
ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், லயன் இல்லாததால், கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து, தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்துவீச்சாளரின் பங்களிப்பும் முக்கியம் என்று ஹைடன் கூறினார்.