
இந்தியா பேட்டிங்
முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஷகிபுல் ஹசன் பந்துவீச்சில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் அடித்த கவர் ஷாட்டை, கேப்டன் லிட்டன் தாஸ் பாய்ந்து பிடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களும், வாசிங்டன் சுந்தர் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

187 ரன்கள் இலக்கு
ஷாபாஸ் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதன் காரணமாக இந்திய அணி 41.2 வது ஓவரில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.

வங்கதேசம் தடுமாற்றம்
முதல் பந்திலேயே நஜிமுல் ஷாண்டோ டக் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வங்கதேச வீரர்களும் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர். அனாமுல் ஹக் 14 ரன்களிலும், பொறுப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 41 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

கோலி பதிலடி
ஒரு கட்டத்தில் ஷகிபுல் ஹசன் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தார். அப்போது வாசிங்டன் சுந்தர் வீசிய பந்தை வேகமாக அடித்த போது, பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஷாட் மிட் விக்கெட்டில் ஒரு கையால் பாய்ந்து கேட்ச் பிடித்து அசத்தினார். தாம் பேட்டிங் செய்யும் போது ஷகிபுல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததற்கு தற்போது விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











