
டி20 உலகக்கோப்பை
அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணியுடன் 2 பயிற்சி போட்டிகளை இந்திய அணி முடித்துள்ளது. இதில் முதல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 2வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணிக்கு குறையாக இருந்தது பேட்டிங் மட்டும் தான். குறிப்பாக் 2வது போட்டியில் 138 ரன்களுக்கெல்லாம் 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பேட்டிங் சொதப்பல்
ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் சொதப்புவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஆஸ்திரேலிய களத்தில் அனுபவம் இல்லாத இந்திய வீரர்கள் அங்குள்ள வேகத்தையும், பவுன்ஸையும் எளிதாக சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில் இதற்காக சீனியர் வீரர் விராட் கோலி புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பாண்ட்யாவிடம் ஆலோசனை
2வது பயிற்சி போட்டி முடிந்த பிறகு நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் களத்திலேயே விராட் கோலி ஆலோசனை நடத்தினார். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக பாண்ட்யாவிடம் பேசிய கோலி, வேகத்தை பயன்படுத்தி எதுபோன்ற ஷாட்களை விளையாடலாம் என அறிவுரை கூறினார். இதே போல அங்கு ஹர்த்திக்கிற்கு விருப்பமான பவுன்ஸர் பந்துகளை வீசுவது குறித்தும் ஆலோசனைக் கூறினார்.

கோலியின் அனுபவம்
தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்களில் விராட் கோலிக்கு தான் ஆஸ்திரேலிய களத்தில் விளையாடிய அனுபவம் அதிகம் உள்ளது. எனவே அனைத்து வீரர்களுக்கும் அவர் தனிப்பட்ட முறையில் ஆலோசனைக்கூறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 பயிற்சி போட்டிகளிலும் விராட் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications