Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் அவுட்டானவுடனே ரிசல்ட் தெரிஞ்சுடுச்சு... ஆனாலும் தொடர்ந்து ஆடினாரு... நெஹ்ரா பாராட்டு

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 11 ரன்களை மட்டுமே அடித்த கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்சில் 72 ரன்களை அடித்திருந்தார்.

இந்நிலையில் போட்டியின் முடிவு தெரிந்தபின்பும் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆடியதாக முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை கண்டுள்ளது. முதல் இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு சுருண்டனர்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

பந்த், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் முதல் இன்னங்சில் 11 ரன்களில் ஆட்டமிழந்த கேப்டன் விராட் கோலி, இரண்டாவது இன்னிங்சில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

72 ரன்களை குவித்த கோலி

72 ரன்களை குவித்த கோலி

விராட் கோலி சிறப்பாக விளையாடி 72 ரன்களை அடித்திருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பந்த் உள்ளிட்டவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையிலும் அவர் ரன் அடிப்பதை நிறுத்தவில்லை.

போட்டியின் இழப்பை உணர்ந்த கோலி

போட்டியின் இழப்பை உணர்ந்த கோலி

இந்நிலையில் அஸ்வின் அவுட்டானவுடனேயே இந்தியா போட்டியை இழந்துவிட்டதை கோலி உணர்ந்ததாகவும், ஆனாலும் அவர் அடித்து ஆடுவதை நிறுத்தவில்லை என்றும் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டு தெரிவித்துள்ளார். ரன்கள் அடிப்பதை விராட் பெருமையுடன் மேற்கொண்டார் என்றும் அவ்வாறு அவர் அடித்து ஆடவில்லை என்றால் ரன்கள் மிகவும் குறைந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

Story first published: Wednesday, February 10, 2021, 20:08 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+