இதுதான் அனுஷ்கா சர்மாவிடம் எனக்கு பிடிக்காத குணம்.. அமீர்கானிடம் போட்டு உடைத்த கோஹ்லி
மும்பை: காதலி அனுஷ்கா சர்மாவிடம் தனக்கு பிடிக்காத விஷயம் என்ன என்பது குறித்து கோஹ்லி நிகழ்ச்சியொன்றில் மனம் திறந்துள்ளார்.
மும்பையிலுள்ள ஸ்டூடியோ ஒன்றில் விராட் கோஹ்லியை பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான் பேட்டி கண்டார். தீபாவளி தினத்தன்று தொலைக்காட்சியில் இந்த பேட்டி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர் ஒருவர் உள்ளே நடைபெற்ற விவரங்களை நாளிதழ் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதுகுறித்த விவரம் இதுதான்.

அனுஷ்காவுடன் காதல்
அனுஷ்கா சர்மாவுடனான உறவு குறித்து கோஹ்லி பேசுகையில், அவரின் நேர்மை மற்றும் அக்கறை தனக்கு பிடிக்கும் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார். தன்னை மேம்பட்ட மனிதராக மாற்றியது அனுஷ்கா சர்மா என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அனுஷ்காவிடம் பிடிக்காது
அனுஷ்கா சர்மாவிடம் எனக்கு வெறுக்க எந்த குணமும் இல்லை. ஆனால் பிடிக்காத குணம் ஒன்று உள்ளது. அவர் எப்போதும் 5-7 நிமிடம் தாமதமாகத்தான் வருவார். இதுதான் எனக்கு பிடிக்காத விஷயம். என்னுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். எங்கள் இருவருக்கும் சிறந்த புரிந்துணர்வு உள்ளது. கடந்த 3-4 வருடங்களில் என்னை மேம்பட்ட நபராக மாற்றியுள்ளார்.

முயல் செல்லப்பெயர்
அன்டர்-17 கிரிக்கெட் தொடரின்போது, நான் செய்த ஹேர்-கட் காரணமாக எனது காதுகள் பெரிதாக தெரிந்தது. இதை பார்த்த எனது நண்பர்கள் 'சீகு' என அழைக்க ஆரம்பித்தனர். அதாவது, முயல் என அழைத்தனர். எனது காதுகள் முயல் காதுகளை போல காணப்பட்டதே இதற்கு காரணம். இந்திய அணியில் நான் இணைந்த பிறகு இந்த பெயர், கேப்டன் டோணியால் பிரபலமாக்கப்பட்டது. 3 இடியட்ஸ், பிகே போன்ற பாலிவுட் திரைப்படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

கோஹ்லியிடம் ராகுலுக்கு பிடிக்காதது
இந்த நிகழ்ச்சியில் இந்திய வீரர் ராஹுலும் ஒரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கூறுகையில், கோஹ்லி ஃபிட்னசை பராமரிப்பது பிடித்த விஷயம். கோஹ்லி தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியுள்ளார். பொறுப்பானவராக மாறியுள்ளார். பிடிக்காத விஷயம் அவர் எப்போதும் தனது உடலை காட்டும் வகையில் சட்டை இல்லாமல்தான் வீரர்கள் அறையில் உலவுவார். எப்போதும் போனில்தான் நேரத்தை செலவிடுவார் என்றார்.


Click it and Unblock the Notifications