Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியான நக்கல் யா கிங் கோலிக்கு..! பேட்டிங்கில் திணறிய ஸ்மித்.. விராட் கோலி செய்த காரியம்

நாக்பூர் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலியா வீரர்கள் தடுமாறினர். தொடக்க வீரராக களம் இறங்கிய வார்னர், உஸ்மான் கவஜா அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் இரண்டு ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட் இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. அப்போது ஸ்மித், லாபஸ்சேன் ஜோடி பொறுமையாக விளையாடி அணியை சர்வில் இருந்து மீட்க போராடியது.

அப்போது ஸ்மித் நேற்று முதலில் ரன் சேர்க்கும் போது தற்காப்பு ஆட்டத்தை பயன்படுத்தினார். மறுபடியும் மானஸ் பொறுமையாக விளையாடினாலும் சில பவுண்டரிகளை அடித்தார்.

தொட முடியவில்லை

தொட முடியவில்லை

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பயிற்சியின் போது அஸ்வினை சமாளிக்க ஆஃப் ஸ்பிண்ணை எதிர்கொள்ள கடும் பயிற்சி எடுத்தனர். இடது கை சுழற் பந்துவீச்சாளர்களின் ஆப் ஸ்பின் தான் ஆடுகளத்தில் எடுபட்டது. குறிப்பாக நேற்று அக்சர்பட்டேல் ஸ்மித்துக்கு எதிராக வீசி கடும் நெருக்கடி கொடுத்தார். இதில் ஸ்மித் ஆறு பந்துகளையும் தொட முடியாமல் திணறினார்.

கோலி கிண்டல்

கோலி கிண்டல்

இதனை அடுத்து அந்த ஓவர் மெய்டனாக மாறியது .இதனை ஸ்லிப்பில் கவனித்த விராட் கோலி ஸ்மித்தை கிண்டல் செய்யும் விதமாக, அவர் தோளில் கையை போட்டு ஏதோ பேசினார். அதற்கு ஸ்மித்தும் சிரித்தபடி ஏதோ பதில் கூற இருவரும் அப்படியே விலகி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. என்ன சுழற் பந்துவீச்சை சரியாக விளையாட முடியவில்லை என்று தான் விராட் கோலி கேட்டு கிண்டல் அடித்திருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்மித் பதில்

ஸ்மித் பதில்

இந்த நிலையில் விராட் கோலிக்கும் தமக்கும் எந்த வித போட்டியும் இந்த தொடரில் இல்லை என்று ஸ்மித் கூறியுள்ளார். தாம் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று நிரூபிக்க இந்தியா வரவில்லை என்றும் என் அணியின் வெற்றிக்காக ரன்குவித்தாலே தமக்கு அது போதுமானது என்றும் ஸ்மித் கூறியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஸ்மித் ஆட்டம் இழப்பதற்கு முன்பு அதே அக்சர்பட்டேல் ஓவரை அதிரடியாக விளையாடினார் .குறிப்பாக அடுத்தடுத்து பவுண்டர்களை வீசி ரன்களை அதிகப்படுத்தினார்.

தலைவலி

தலைவலி

இதனால் ஸ்மித் பெரிய இலக்கை தொட போகிறார் என்று இந்திய ரசிகர்கள் நினைத்த நிலையில் ஜடஜாவின் ஒரு பந்தை கணிக்க தவறி போல்ட் ஆனார். முதல் டெஸ்டில் ஸ்மித் விளையாடுவதை வைத்து பார்த்தால் இந்தியாவுக்கு இந்த தொடரில் ஸ்மித்தும், மார்னஸ் லாபஸ்சேனும் பெரிய தலைவலியாக இருக்கப் போகிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, February 10, 2023, 11:52 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+