Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு அவர் விக்கெட்தான் வேணும்... அடம்பிடிக்கும் பாட் கமின்ஸ்.. யார் தெரியுமா?

சிட்னி : இந்தியா -ஆஸ்திரேலியா தொடர் வரும் 27ம் தேதி துவங்கி ஜனவரி மாதம் வரையில் நீடிக்க உள்ளது.

இந்த தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் சிட்னியில் குவாரன்டைன் மற்றும் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தனக்கு இந்திய அணியின் முக்கிய விக்கெட்டாக விராட் கோலி தெரிவதாகவும், அவரை வீழ்த்திவிட்டால் வெற்றி வசப்படும் என்றும் ஆஸ்திரேலிய துணை கேப்டன் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

குவாரன்டைனில் பாட் கமின்ஸ்

குவாரன்டைனில் பாட் கமின்ஸ்

ஐபிஎல் 2020 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ், தற்போது இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். யூஏஇயில் இருந்து இந்திய அணியினர் போலவே சிட்னி வந்த அவர் தற்போது குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார்.

கோலியே பெரிய விக்கெட்

கோலியே பெரிய விக்கெட்

வரும் 27ம் தேதி இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி துவங்கவுள்ள நிலையில், பாக்ஸ் கிரிக்கெட்டிற்காக பேசிய பாட் கமின்ஸ், இந்திய அணியின் மிகப்பெரிய விக்கெட்டாக கேப்டன் விராட் கோலியை கருதுவதாகவும் அவரை வீழ்த்துவதே வரும் தொடர்களில் தன்னுடைய இலக்கு என்றும் கூறியுள்ளார்.

பாட் கமின்ஸ் பாராட்டு

பாட் கமின்ஸ் பாராட்டு

இங்கிலாந்தில் ஜோ ரூட், நியூசிலாந்தில் கேன் வில்லியம்சன் போல ஒவ்வொரு அணியிலும் மிகச்சிறந்த வீரர் இருப்பார் என்றும், அது பெரும்பாலும் கேப்டனாக இருப்பதாகவும் அவர் கூறினார். இதேபோல இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி சிறந்து விளங்குவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். அவரை வீழ்த்துவதன்மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றியை சாத்தியப்படுத்தலாம் என்றும் கூறினார்.

ஆஸ்திரேலியா தயார்

ஆஸ்திரேலியா தயார்

மீண்டும் சிட்னிக்கு வந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், குவாரன்டைனில் லாக் ஆகி உள்ள போதிலும் தினமும் சில மணி நேரங்கள் பயிற்சி உள்ளிட்டவற்றிற்காக வெளியில் செல்வது சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்கு இந்த தொடரில் கடும் நெருக்கடியை அளிக்க ஆஸ்திரேலியா தயாராக உள்ளதாகவும் கமின்ஸ் கூறினார்.

வலிமையுடன் விளையாடுவோம்

வலிமையுடன் விளையாடுவோம்

இங்கிலாந்து தொடர் மற்றும் ஐபிஎல் போன்றவற்றில் தங்களுடைய அணியின் பெரும்பாலான வீரர்களுக்கு மிகுந்த பயிற்சி கிடைத்துள்ளதாகவும் அதனால் வலிமையுடன் இந்திய அணியை எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் தான் தன்னுடைய பந்துவீச்சில் அதிக அனுபவத்தை பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Friday, November 20, 2020, 14:59 [IST]
Other articles published on Nov 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+