சிறப்பான சாதனை பார்சல்.. 4வது டெஸ்டில் கோலிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சச்சின், கவாஸ்கரையே முந்தலாம்!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அட்டகாசமான சாதனை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் உள்ள இந்திய அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.
இப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் இந்திய அணியின் செயல்பாட்டை விட விராட் கோலி எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகரித்துள்ளது.

4வது டெஸ்ட் போட்டி
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கம்பேக் தந்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் சதமடிக்காமல் உள்ளார். அதற்கேற்றார் போல முதல் டெஸ்டின் போதே 44 ரன்களை அடித்து பலமாக இருந்தார். ஆனால் அம்பயரின் தவறான முடிவால் அரைசதம் கூட அடிக்காமல் வெளியேறிவிட்டார். அதன்பின்னர் ஸ்பின்னர்களிடம் சிக்கி தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வருகிறார்.அவரின் பலவீனத்தை நன்கு அறிந்துக்கொண்டனர்.

மற்றொரு சாதனை
இந்நிலையில் இந்த 4வது டெஸ்டில் பிரமாண்ட சாதனை மூலம் கம்பேக் கொடுக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அதாவது, இந்த போட்டியில் 42 ரன்களை மட்டும் அடித்துவிட்டால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை குவித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் படைத்துள்ளனர்.

அதிவேகம்
ஒருவேளை முதல் இன்னிங்ஸிலேயே கோலி 4000 ரன்களை கடந்துவிட்டால், சச்சின், சுனில் கவாஸ்கர், டிராவிட் ஆகியோரை முந்தி அதிவேகமாக சாதனை படைத்த 2வது வீரர் என்ற பெருமையை பெறுவார். சுனில் கவாஸ்கர் 4000 ரன்களை எடுக்க 87 இன்னிங்ஸை எடுத்துக்கொண்டார். மறுபுறம் ராகுல் டிராவிட் 88 இன்னிங்ஸை எடுத்துக்கொண்டார். சேவாக் 71 இன்னிங்ஸும், சச்சின் 78 இன்னிங்ஸும் எடுத்துக்கொண்டுள்ளனர். கோலி 76 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டுவார்.

பிட்ச் நிலை
விராட் கோலி சாதனை படைப்பதற்கு உதவுவதை போலவே அகமதாபாத் மைதானத்தின் பிட்ச்-ம் சிறப்பாக உள்ளது. கடந்த 3 டெஸ்ட்களை போல இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கும் இங்கு நல்ல உதவி கிடைக்கிறது. எனவே இதனை பயன்படுத்தி கோலி இந்த போட்டியில் சதம் அடிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications