மும்பை : இந்திய கிரிக்கெட்டில் யார் தற்போது சிறந்த வீரர்கள் என்று ரசிகர்களுக்குள் மோதல் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதில் பலர் விராட் கோலி தான் கிங் என்றும் இல்லை ரோஹித் சர்மா தான் கெத்து என்றும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்று ஆண்டு வாரியாக தற்போது பார்க்கலாம்.
2010 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்காக சர்வதேச அரங்கில் 1868 ரன்கள் அடித்து சேவாக் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு விராட் கோலி 1644 ரன்கள் அடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டும் விராட் கோலி 2186 ரன்கள் அடித்து முதல் இடத்தை நிறைவு செய்தார்.

இதேபோன்று 2013ஆம் ஆண்டு 1913 ரன்களும் 2014 ஆம் ஆண்டு 2286 ரன்கள் அடித்து விராட் கோலி தொடர்ந்து நான்கு முறை முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரகானே 1352 ரன்கள் அடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மீண்டும் விராட் கோலி 2595 ரன்கள் அடித்து முதல் இடத்தில் நிறைவு செய்தார்.
2017 ஆம் ஆண்டு விராட் கோலி 2818 ரன்களும், 2012 ஆம் ஆண்டு 2735 ரன்களும் எடுத்து விராட் கோலி மீண்டும் ஹாட்ரிக் சாதனையை படைத்திருந்தார். இதேபோன்று 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக 2455 ரன்கள் அடித்து விராட் கோலி முதல் இடத்தில் நிறைவு செய்திருக்கிறார். அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு கே எல் ராகுல் 847 ரன்கள் அடித்து முதல் இடத்திலும், 2021 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா 1420 ரன்கள் எடுத்து முதல் இடத்திலும், 2022 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் 1609 ரன்கள் எடுத்து முதல் இடத்திலும் இருந்தனர்.
2023 ஆம் ஆண்டு தற்போது வரை கில் ஆயிரத்து 11 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த 13 ஆண்டுகளில் விராட் கோலி மட்டும் எட்டு முறை இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். எனினும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவருடைய பார்ம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மற்ற வீரர்கள் அந்த இடத்தை பிடித்திருக்கிறார்கள். தற்போது உலகக்கோப்பை ஆண்டு என்பதால் விராட் கோலி மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடிப்பாரா இல்லை கில் புது கோலியாக உருவெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.