Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூருவில் பிரபல சிஎஸ்கே வீரருடன் விராட் கோலி சந்திப்பு.. என்ன விசயம்?

பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக மருத்துவத் தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்காக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்திற்கு சென்றுள்ளார். கடந்த ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியின் போது அவரது வலது காலில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் கோலி இடம் பெற்றுள்ள போதிலும், அவர் விளையாடுவது அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும். பிசிசிஐ மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் கோலி தனது உடற்தகுதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் அங்கு வந்திருப்பது இளம் கிரிக்கெட் வீரர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு பயிற்சி பெற்று வரும் சக வீரர்கள் கோலியை ஆர்வத்துடன் சந்தித்து உரையாடியதுடன், அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Virat Kohli interacting with Ayush Mhatre in Bengaluru

விராட் கோலியுடன் ஆயுஷ் மத்ரே சந்திப்பு

இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டனும், சிஎஸ்கே வீரருமான ஆயுஷ் மத்ரேவும் இந்த மையத்தில் கோலியைச் சந்தித்துள்ளார். கோலியுடன் எடுத்த பிரத்யேகப் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்ரே, "ஒரு ஜாம்பவானுடன் மறக்க முடியாத உரையாடல்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

IND vs IRE: 2வது டி20 இந்திய அணி பிளேயிங் லெவனில் 3 மாற்றத்திற்கு வாய்ப்பு.. கம்பீர் அதிரடி முடிவு

IND vs IRE: 2வது டி20 இந்திய அணி பிளேயிங் லெவனில் 3 மாற்றத்திற்கு வாய்ப்பு.. கம்பீர் அதிரடி முடிவு

ஆயுஷ் மத்ரேவின் கிரிக்கெட் பயணம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக ஐபிஎல் 2026 தொடரில் விளையாடிய ஆயுஷ் மத்ரேவின் சிறப்பான ஆட்டம், காயம் காரணமாகப் பாதியிலேயே முடிவுக்கு வந்தது. இருப்பினும், காயம் காரணமாக வெளியேறுவதற்கு முன்பாக, அவர் சிஎஸ்கே அணியில் தனது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்த சமயத்தில் அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாளராகத் திகழ்ந்த மத்ரே, 6 இன்னிங்ஸ்களில் 33.50 சராசரியுடன் 201 ரன்களைக் குவித்திருந்தார். இதில் 177.87 என்ற அதிவேக ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டு அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 73 ஆகும்.

IND vs IRE: அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு.. இன்னும் 2 அடித்தால் போதும்!

IND vs IRE: அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு.. இன்னும் 2 அடித்தால் போதும்!

மும்பையைச் சேர்ந்த இந்த இளம் வீரர், உள்நாட்டு கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 65.42 சராசரியுடன் 458 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளிலும் இவரது புள்ளிவிவரங்கள் வியக்கத்தக்க வகையில் உள்ளன; 19 போட்டிகளில் விளையாடி 176.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 766 ரன்கள் குவித்துள்ளார். மேலும், அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரிலும் 214 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மத்ரே அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 28, 2026, 15:27 [IST]
Other articles published on Jun 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+