Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. கோலியின் நம்ப முடியாத மாற்றம்

மும்பை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன் ஃபிட்னெஸ் மீது அதிக அக்கறை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், அவர் கிரிக்கெட் ஆடத் துவங்கிய காலத்தோடு ஒப்பிடும் போது அவரது உடற்தகுதியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தனது மாற்றம் பற்றி தன் சமூக வலைதள பக்கத்தில் தன் இருவேறு காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கோலியின் உழைப்பு அதிகம்

கோலியின் உழைப்பு அதிகம்

கோலி கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதோடு மட்டுமில்லாமல், சைவ உணவிற்கு மாறியதும் தனக்கு பெரிதும் உதவி வருவதாக சமீபத்தில் கூறி இருந்தார். இந்திய கிரிக்கெட்டில் மிக ஃபிட்டான வீரர் என்றால் அது கோலிதான் என்ற நிலைமைக்கு தன்னை வளர்த்துக் கொண்டார் கோலி.

கோலியின் உடற்தகுதி

கோலியின் உடற்தகுதி

மற்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் வியக்கும் அளவிற்கு கோலியின் மாற்றம் மற்றும் உடற்தகுதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோலி தான் மட்டுமில்லாது இந்திய அணியும் உடற்தகுதியோடு இருக்க வேண்டுமென யோ-யோ போன்ற உடற்தகுதி தேர்வுகளை இந்திய அணிக்கு கட்டாயமாக்கி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உழைப்பு மூலம் எதுவும் சாத்தியமே

கோலி சர்வதேச போட்டிகளில் ஆடத் துவங்கிய போதும், அதற்கு முன்பும் பப்ளியாக தான் இருந்தார். அதன் பின்னரே கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உருமாற்றம் அடைந்தார். தனது உருமாற்றத்தை ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கோலி. அதில், "கவனம் மற்றும் கடின உழைப்பு மூலம் எதுவும் சாத்தியமே. தொடர்ந்து உழையுங்கள். நம்புங்கள்" என நம்பிக்கை ஊட்டி உள்ளார்.

உச்சத்தில் கோலியின் பார்ம்

உச்சத்தில் கோலியின் பார்ம்

கோலியின் இந்த உடற்தகுதி மாற்றம் அவரது ஆட்டத்திலும் வெளிப்படுகிறது. தன் துவக்க காலத்தை விட கடந்த சில ஆண்டுகளில் கோலியின் பார்ம் உச்சத்தில் இருக்கிறது. அவரது கேப்டன் செயல்பாடுகள் விமர்சனத்தை சந்தித்து வந்தாலும், தனிப்பட்ட அவரது பேட்டிங் திறன் வளர்ந்து கொண்டே தான் வருகிறது.

Story first published: Tuesday, October 16, 2018, 14:41 [IST]
Other articles published on Oct 16, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+