ஜான்டி ரோட்சுக்கு பிறகு இப்படி பறந்து, பறந்து ஃபீல்டிங் செய்வது நம்ம கோஹ்லிதான்!
ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறும் நிலையில், இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி பறந்து பறந்து பிராக்டிஸ் செய்து வருகிறார்.
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நேற்று இந்தியா வந்து சேர்ந்தது இங்கிலாந்து டெஸ்ட் அணி. இதனிடையே இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்., அதிலும் கோஹ்லி பறந்து பறந்து ஃபீல்டிங் செய்து வருகிறார். அந்த படத்தை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள கோஹ்லி, என்னாலும் பறக்க முடியும் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நான் எதை செய்கிறேனோ அதை விரும்பியும் செய்கிறேன் எனவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார் கோஹ்லி. அவரது ரசிகர்கள் இந்த போட்டோவை தீயாய் ஷேர் செய்து, பார்த்தீர்களா எங்கள் தலைவர் ஆக்டிவ்னஸ்சை என்று கூறி வருகிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் 90களில் மிகப்பெரிய ஃபீல்டராக விளங்கியவர். "பறப்பது பறவையல்ல, ரோட்ஸ்" என அவரது ஃபீல்டிங் போட்டோக்களை லைவாக போட்டு கமெண்ட் செய்தன பிரபல பத்திரிகைகள். விராட் கோஹ்லியும் பறத்தலை நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications