Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி செய்த சாதனை..!! வேறு யாராலும் தொட முடியாத CAPTAIN KOHLI RECORDS..

கேப் டவுன்: அனைத்து நல்ல விசயங்களுக்கும் ஒரு முடிவு இருக்கும். அது போல் விராட் கோலி தனது கேப்டன் பதவியை முழுமையாக ராஜினாமா செய்துள்ளார்.

இனி விராட் கோலி ஒரு சாதாரண வீரராக தான் அணியில் தொடர்வார். ஆனால் விராட் கோலி செய்த சாதனையை வேறு எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது

அகல பாதாளத்தில் இருந்த டெஸ்ட் அணியை, உச்சத்துக்கு கொண்ட சென்ற முழு பெருமையும் கிங் கோலிக்கு தான் சேரும்.

நம்பர் 1 அணி

நம்பர் 1 அணி

விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது , இந்தியா தரவரிசையில் இருந்த இடம் 7. ஆனால் தற்போது அவர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள இன்று, இந்தியா தரவரிசையில் உள்ள இடம் ஒன்று. விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற எந்த டெஸ்ட் தொடரையும் இழந்ததே இல்லை. 11 தொடரில் சொந்த மண்ணில் கேப்டனாக இருந்த கோலி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

டெஸ்டில் வெற்றி

டெஸ்டில் வெற்றி

இதே போல் விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து( முன்னிலை) மண்ணில் இந்தியா வென்றுள்ளது. இதே போன்று இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக வெற்றிகளை பெற்றுள்ள கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார் 68 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கோலி, 40 போட்டிகளில் வெற்றி, 11 போட்டிகளில் டிரா, 17 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளார்.

டெஸ்ட் கேப்டனாக கோலி

டெஸ்ட் கேப்டனாக கோலி

2வது இடத்தில் தோனி 27 வெற்றிகளுடனும், கங்கலி 21 வெற்றிகளுடனும் உள்ளனர். சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ள 4வது கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலி 5864 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் அணியில் கேப்டனாக 7 இரட்டை சதம், 20 சதம், 18 அரைசதம், 7 ஆட்டநாயகன் விருது, 3 தொடர் நாயகன் விருதை கேப்டன் கோலி வென்றுள்ளளார்.

ஆல் டைம் பெஸ்ட்

ஆல் டைம் பெஸ்ட்

டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி மொத்தமாக 18 தொடர்களில் வென்றுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என ஒட்டு மொத்தமாக கோலி கேப்டனாக இந்தியாவுக்கு 213 போட்டிகளில் பொறுப்பேற்று 135 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். கேப்டனாக 12 ஆயிரத்து 883 ரன்கள் அடித்துள்ளார். கேப்டனாக மட்டும் 41 சதம் விளாசியுள்ளார் விராட் கோலி. இந்திய அணியின் கேப்டனாக பல உயரங்களை தொட்டுள்ள விராட் கோலியின் ராஜினாமா முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Saturday, January 15, 2022, 20:44 [IST]
Other articles published on Jan 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+