Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்பளம் பத்தாது, கூட்டிக் கொடுங்க... ரவி சாஸ்திரியை தொடர்ந்து விராட் கோஹ்லியும் அதிருப்தி

மும்பை: இந்திய வீரர்களுக்கு அதாவது ஏ கிரேடு கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியை ஊதியமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏ, பி, சி என்று மூன்று கிரேடுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

அதன்படி ஏ கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ. 1 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் ஊதியமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டது.

டெஸ்ட் வீரர்கள்

டெஸ்ட் வீரர்கள்

இதேபோல் டெஸ்ட மேட்ச் விளையாடும் வீரர்களுக்கு ரூ.15 லட்சமும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 6 லட்சமும், 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கு ரூ. 3 லட்சமும் ஊதியமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ரவி சாஸ்திரி அதிருப்தி

ரவி சாஸ்திரி அதிருப்தி

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ உயர்த்தியுள்ள ஊதியத்தை வெளிநாட்டு வீரர்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை. வேர்க்கடலைக்கு ஒப்பானது. எனவே அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கோஹ்லியும் அதிருப்தி

கோஹ்லியும் அதிருப்தி

இதேபோல் வீரர்களின் ஊதியத்தால் அதிருப்தி அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், இங்கிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

5 கோடி கொடுங்க

5 கோடி கொடுங்க

எனவே ஏ கிரேடில் உள்ள இந்திய வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி கிரேடில் உள்ள வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி கிரேடில் உள்ள வீரர்களுக்கு ரூ.1.5 கோடியும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Thursday, April 6, 2017, 12:47 [IST]
Other articles published on Apr 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+