Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சைட்ல நல்லா வழிச்சு.. நீட்டா மேலே தூக்கி மடிச்சு.. சூப்பரா தாடி விட்டு... கோஹ்லி ரெடி பாஸ்!

டெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு வீரர்கள் தயாரோ இல்லையோ, முடியெல்லாம் வெட்டி விராத் கோஹ்லி ரெடியாகி விட்டார். ஒரு மாதிரியான டிசைனில் முடி வெட்டியுள்ளார் கோஹ்லி. அதை போட்டோ பிடித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் போட்டுள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதவுள்ளன. இந்தியாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெல்ல இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. அணியும் கூட அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் கேப்டன் விராத் கோஹ்லி நியூசிலாந்து தொடருக்குத் தயாராகி விட்டார். இந்தத் தொடருக்காக அவர் புதிய ஹேர்ஸ்டைலுக்கும் மாறியுள்ளார். இந்த ஹேர் ஸ்டைலையும் அவர் உலகுக்கு வெளிக்காட்டியுள்ளார்.

செம ஸ்டைல் பாஸ்

செம ஸ்டைல் பாஸ்

தனது புதிய ஹேர்ஸ்லை படம் பிடித்துப் போட்டுள்ள கோஹ்லி அபெனி ஜார்ஜ் எல்லாப் பக்கமும் சூப்பராக கவர் செய்து விட்டார். இது எனக்குப் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார். அபெனி ஜார்ஜ்தான் இவரது ஹேர் டிரஸ்ஸர் ஆவார். இவர்தான் இந்த ஸ்டைலில் முடி வெட்டி விட்டுள்ளார் கோஹ்லிக்கு.

எப்படி இருக்கு புதுத் தலை!

புதிய ஹேர்ஸ்டைல் செம வித்தியாசமாக இருக்கிறது.அழகான தாடி விட்டுள்ளார் கோஹ்லி. மேலே கிருதாவிலிருந்து தலையின் மேற் பகுதி வரை நன்றாக ஒட்ட வெட்டி விட்டனர். சட்டியைப் போட்டு வெட்டியது போல மேலே மட்டும் முடி இருக்கிறது. சுற்றிலும் நன்றாக வழித்து விட்டனர். அதாவது ஒரு அழகான தீவு லேன்ட்ஸ்கேப் போல மாறி இருக்கிறது கோஹ்லியின் தலை + முகம்.

தீவிரப் பயிற்சி

தீவிரப் பயிற்சி

இதற்கிடையே ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் கோஹ்லி முன்பு போட்டிருந்தார். அதில் தான் டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருவதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார்.

பைக் ரைடு.. டிரட்மில்...

பைக் ரைடு.. டிரட்மில்...

வீடியோவில் கோஹ்லி பேசுகையில், தினசரி கால் மணி நேரம் பைக்கில் ஒரு ரவுண்டு. பிறகு நேராக டிரெட் மில். அங்கு தீவிரமாக செய்து விட்டு பின்னர் சிறிய ஓய்வு. அதன் பிறகு மீண்டும் உடற் பயிற்சி என ஓடிக் கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் நல்லா இருங்க

எல்லோரும் நல்லா இருங்க

எல்லோரும் கடுமையாக உடற்பயிற்சி செய்யுங்கள். உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியாக இருங்கள் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து அந்த வீடியோவை முடித்திருந்தார் கோஹ்லி.

Story first published: Thursday, September 15, 2016, 18:14 [IST]
Other articles published on Sep 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+