இளம் பெண்கள் கோஹ்லியின் இந்த வீடியோவை பார்த்து விடாதீர்கள்!
கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, உலகின் சிறந்த ஃபிட்னஸ் உள்ள கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். உடலை கட்டுக்கோப்பாகவும், காயங்களில் இருந்து தப்பிக்கவும் அவர் சிறந்த டயட் மற்றும் உடற்பயிற்சிகளை முழு மனதோடு செய்து வருகிறார்.
சமூக தளங்களில் கோஹ்லியை ஃபாலோ செய்யும் பல லட்சம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தனது உடற்பயிற்சி படங்களை, வீடியோக்களை அவ்வப்போது அப்லோடு செய்வது கோஹ்லி வழக்கம்.
இலங்கைக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

ஜிம்மில் கடும் பயிற்சி
தொடரை வென்ற மகிழ்ச்சியில் ஜிம்மில் கூடுதல் நேரத்தை செலவிட்டுள்ளார் விராட் கோஹ்லி. பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும்படி ரன் சேகரிக்கவில்லை என்றபோதிலும், அவர் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வருவதற்கான அறிகுறி தெரிகிறது. இது எதிரணியை வயிறு கலங்கச் செய்தபடிதான் உள்ளது.

அப்லோடு
கோஹ்லி ஜிம்மில் செய்த உடற்பயிற்சியை பார்க்கும் எதிரணியினர் கண்டிப்பாக அவர் கொல வெறியில் காத்திருப்பதை உணர முடியும். வயிறு மற்றும் இடுப்புக்கும், கை புஜங்களுக்கும் வலு சேர்க்க கூடிய உடற்பயிற்சியை அநாயசமாக செய்து அதை டிவிட்டரில் வீடியோவாக அப்லோடு செய்துள்ளார்.
ரசிகர்களுக்கு டிப்ஸ்
"ஒவ்வொரு நாளும் முக்கியம் என்பதால் ஒருபோதும் கடின உழைப்பை விட்டுவிடாதீர்கள்" என்று அவர் வீடியோவுக்கு கீழே எழுதியுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். இளம் பெண்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம். பார்த்தால் உங்கள் மனதை இந்த பிட்னஸ் நாயகனிடம் பறி கொடுக்க நேரிடும். அப்புறம் அனுஷ்கா ஷர்மா வாழ்க்கை என்னவாகும் என யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

வீட்டில் செய்துவிடாதீர்கள்
ஆனால் ஆர்வக்கோளாறில் உரிய முன்னேற்பாடு பயிற்சிகள் இன்றி, கோஹ்லி செய்யும் உடற்பயிற்சியை வீட்டில் செய்துவிடாதீர்கள். விலா எழும்பு பக்கமாக பிடித்து வைத்துக்கொள்ளும்.. அப்புறம் அவஸ்தைப்படுவீர்கள். உரிய பயிற்சியாளர் துணையோடு நீங்களும் களமிறங்குங்கள். உங்களுக்குள்ளும் ஒரு கோஹ்லி ஒளிந்து கொண்டிருக்கலாம், யார் கண்டது?


Click it and Unblock the Notifications