Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கிங் என்றுமே கிங் தான்”.. 2021ல் பாபர் அசாமை விட விராட் கோலி தான் சிறந்தவர்.. அசத்தும் புள்ளிவிவரம்

சென்னை: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை அனைவரும் புகழ்ந்து வரும் நிலையில் கிங் விராட் கோலி தான் இந்த ஆண்டும் டாப் என்பது நிரூபனம் ஆகியுள்ளது.

2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என அடுத்தடுத்த முக்கிய தொடர்கள் அரங்கேறியுள்ளன.

இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தான் விராட் கோலியை முந்திவிட்டதாக முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

கோலியின் சோகம்

கோலியின் சோகம்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கடந்த 2 ஆண்டுகளாகவே சறுக்கலாக உள்ளது. ரன் மிஷின், சேசிங் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் கோலி, இந்தாண்டு ஃபார்ம் அவுட்டாகிவிட்டார். இனி இந்திய அணியை வழிநடத்தக்கூடாது என பதவிகள் பறிக்கப்பட்டுள்ளனர். அவர் 2019ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சதம் கூட அடிக்காததால் கோலிக்கு முடிவு வந்துவிட்டது என்ற விமர்சனங்களும் உள்ளது.

குவிந்த விமர்சனங்கள்

குவிந்த விமர்சனங்கள்

மிகச்சிறந்த பேட்ஸ்மேனான கோலி மீது இப்படி விமர்சனங்கள் எழ பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் வளர்ச்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதிகப்படியான அரைசதங்கள், விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய இன்னிங்ஸ்கள் அடிப்பது என அசத்தியுள்ளார். இதனால் இனி அவர் தான் உலகின் டாப் கிளாஸ் ப்ளேயர் என்ற கோலியின் இடத்தை பறித்துள்ளார்.

கோலி தான் என்றும் டாப்

கோலி தான் என்றும் டாப்

இந்நிலையில் விராட் கோலி தான் இப்போதும் டாப் வீரர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பேட்ஸ்மேனின் உண்மையான தரத்தை டெஸ்ட் கிரிக்கெட் தான் கூறும் என்பது பலரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. அந்தவகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை 2021ம் ஆண்டில் பாபர் அசாம் 416 ரன்களை அடித்துள்ளார். 4 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஆனால் விராட் கோலி 4 அரைசதங்களுடன் 483 ரன்களை குவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் ஏன் குறைந்த ரன்

டி20 போட்டிகளில் ஏன் குறைந்த ரன்

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பாபர் அசாமை விட விராட் கோலி குறைந்த ஸ்கோரை தான் அடித்துள்ளார். ஆனால் இந்தாண்டில் பாகிஸ்தான் அணி விளையாடியதை போல இந்திய அணிக்கு அதிகப்படியான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அமையவில்லை. இதன் காரணமாக தான் விராட் கோலியின் ஸ்கோர் குறைந்துள்ளது. விராட் கோலி சதமடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த போதும், அரைசதங்களை ( 50, 60) அடித்து, தான் கிளாசிக் ப்ளேயர் தான் என்பதை கோலி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

Story first published: Thursday, December 23, 2021, 20:15 [IST]
Other articles published on Dec 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+