Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி vs திலக் வர்மா.. முதல் 23 சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தது யார்?

மும்பை : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்திற்கு திலக் வர்மா சரியான தேர்வாக இருப்பார் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திலக் வர்மா, ஏற்கனவே தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்து இருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு சதம் அடித்த திலக் வர்மா அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ind vs eng tilak varma virat kohli

இந்த நிலையில் திலக் வர்மா தற்போது 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதே கட்டத்தில் விராட் கோலி எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார். திலக் வர்மா எவ்வளவு அடித்திருக்கிறார் என்பதை நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். திலக் வர்மா 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 725 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 55 என்று அளவில் இருக்கிறது.

திலக் வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆறு இன்னிங்ஸ் விளையாடி 39 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 77 ஆகும். தற்போது இங்கிலாந்து எதிரான மூன்று இன்னிங்ஸ்களில் 109 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் எதிராக 5 இன்னிங்ஸில் 173 ரன்களும், வங்கதேசத்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 55 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று இன்னிங்ஸில் சராசரியாக 50 ரன்களும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 26 ரன்களும் அடித்திருக்கிறார்.

இதே கட்டத்தில் விராட் கோலி 23 டி20 போட்டிகள் விளையாடி 677 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 37.61 என்ற அளவில் இருக்கிறது. இந்த 677 ரன்களில் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 150 ரன்களும், சராசரி 75 என்று வைத்திருக்கிறார்.

இதே கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு இன்னிங்சில் விளையாடிய கோலி 97 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 70 ரன்களும், இலங்கைக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 68 ரன்களும் அடித்திருந்தார். இதே கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி, 2 இன்னிங்ஸ் விளையாடி 30 ரன்கள், வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு இன்னிங்ஸ் விளையாடி 68 ரன்களும் கோலி அடித்துள்ளார்.

இதில் ஒப்பிட்டு இருக்கும் போது திலக் வர்மாவின் கையே ஓங்கி இருக்கிறது. இதே கட்டத்தில் திலக் வர்மா ஸ்ட்ரைக் ரேட் 155 என்ற அளவில்இருந்திருக்கிறது. ஆனால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் இதே கட்டத்தில் 129 என்ற அளவில் தான் உள்ளது. திலக் வர்மா இதே கட்டத்தில் ஐந்து அரைசதம் அடித்திருந்தார். இதே கட்டத்தில் விராட் கோலியும் அதே ஐந்து அரை சதம் அடித்திருந்தார். ஆனால் திலக் வர்மா இரண்டு சதம் அடித்துள்ள நிலையில் கோலி அப்போது சதம் ஏதும் அடிக்கவில்லை. அதனால் கோலியை விட திலக் வர்மா இந்த கட்டத்தில் அதிக ரன்ளை அடித்து இருந்திருக்கிறார். ஆனால் விராட் கோலி,சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 125 போட்டிகளில் விளையாடி 418 ரன்கள் அடித்துள்ளார்.

Story first published: Thursday, January 30, 2025, 16:56 [IST]
Other articles published on Jan 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+