Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளிநாடு மேட்ச்னா அனுஷ்காவும் இருக்கணும்.. பிசிசிஐ ரூல்ஸ மாத்துங்க.. கோலி அதிரடி

மும்பை : வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் மனைவி, குழந்தைகள் மற்றும் உதவியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் கிரிக்கெட் வீரர்களுடன் தங்கக் கூடாது என பிசிசிஐ ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இங்கிலாந்து தொடரில் இருந்து பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, இன்னும் ஒரு முழு வெளிநாட்டு தொடரில் கூட நடைமுறையில் பின்பற்றப்படவில்லை.

அதற்குள், இதை மாற்ற வேண்டும், வீரர்கள் தங்கள் மனைவியோடு வெளிநாட்டு தொடர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டுள்ளார் கோலி.

கோரிக்கை விடுத்த கோலி

கோரிக்கை விடுத்த கோலி

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. சில வாரங்கள் முன்பே கோலி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது முறையாக அணி மேலாளர் மூலம் பிசிசிஐ-க்கு அனுப்பப்பட்டுள்ளது.

நடவடிக்கை இருக்காது

நடவடிக்கை இருக்காது

பிசிசிஐ இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் அமைத்த நிர்வாக கமிட்டிக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் இப்போதைக்கு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.

கோலியோடு அனுஷ்கா

கோலியோடு அனுஷ்கா

விராட் கோலி எப்போது வெளிநாட்டுக்கு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க சென்றாலும், அவர் மனைவி அனுஷ்கா சர்மாவும் உடன் செல்வார். இது சமீப காலமாக சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், பிசிசிஐ விதித்த கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என கேட்டுள்ளார் கோலி.

கட்டுப்பாடுகள் - எதிர்ப்புகள்

கட்டுப்பாடுகள் - எதிர்ப்புகள்

விளையாட்டு வீரர்கள் முக்கிய போட்டிகளின் போது தங்கள் குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்ற விதி சில கிரிக்கெட் அணிகளிலும், கால்பந்து அணிகளிலும் நடைமுறையில் உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 17, 2020, 21:37 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+