Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட் பிராக்டீஸ்... ரொம்ப பிடிச்சுருக்கு... விராட் கோலி நெகிழ்ச்சி!

சிட்னி : முகமது ஷமி, புஜாரா உள்ளிட்டவர்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் பிராக்டீசில் கேப்டன் விராட் கோலி ஈடுபட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் பகலிரவு போட்டியில் மட்டுமே பங்கேற்று விளையாடவுள்ள விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பவுள்ளார்.

Virat Kohli Warms Up For Tests With Practice Sessions Against Mohammed Shami And Co

இந்நிலையில், டெஸ்ட் பிராக்டீசில் ஈடுபட்ட விராட் கோலி, அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தான் அதை மிகவும் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னியில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முகமது ஷமி, புஜாரா உள்ளிட்டவர்களுடன் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பிராக்டீசில் ஈடுபட்டார்.

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விராட் கோலி, தான் அதை மிகவும் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 17ம் தேதி அடிலெய்டில் துவங்கவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கவுள்ள விராட் கோலி, தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 18, 2020, 12:29 [IST]
Other articles published on Nov 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+