For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியை காப்பாற்றி விட்டு.. சைலன்ட்டாக கேப்டன் பதவியை துறந்த தோனி.. வெளிவராத ரகசியம்!

மும்பை : 2014ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் பல சறுக்கல்கள் நடந்தேறியது. அதன் உச்சகட்டமாக ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டியின் முடிவில் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வை அறிவித்தார்.

Recommended Video

Virat Kohli- ஐ காப்பாற்றி விட்டு, Captaincy-யும் விட்டுக்கொடுத்த Dhoni

அதே ஆண்டில் கோலி தன் வாழ்நாளின் மிக மோசமான ஆட்டத்தை பதிவு செய்து இருந்தார். ஆனால், அதற்கு அடுத்த தொடரிலேயே அவர் அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. அந்த தொடரில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றது. மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. கடைசி இரண்டு போட்டிகளில் 200 ரன்களை கூட தாண்டவில்லை இந்திய அணி.

விராட் கோலி பார்ம் அவுட்

விராட் கோலி பார்ம் அவுட்

அதன் முடிவில் விராட் கோலி மீது கடும் விமர்சனம் செய்யப்பட்டது. அப்போது ஒருநாள் போட்டிகளில் முன்னணி வீரராக இருந்த கோலி, டெஸ்ட் போட்டிகளில் பார்மை இழந்து விட்டார் என கூறப்பட்டது. அவரை அணியில் இருந்து நீக்குமாறும் குரல்கள் எழுந்தன.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அதன் முடிவில் விராட் கோலி மீது கடும் விமர்சனம் செய்யப்பட்டது. அப்போது ஒருநாள் போட்டிகளில் முன்னணி வீரராக இருந்த கோலி, டெஸ்ட் போட்டிகளில் பார்மை இழந்து விட்டார் என கூறப்பட்டது. அவரை அணியில் இருந்து நீக்குமாறும் குரல்கள் எழுந்தன.

கேப்டன் கோலி

கேப்டன் கோலி

ஆனால், அடுத்ததாக அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி அணியில் நீடித்தார். முதல் போட்டியில் தோனி இடம்பெறாத நிலையில் அப்போதைய துணை கேப்டன் விராட் கோலி அணியை வழிநடத்தினார்.

ஆக்ரோஷமான கேப்டன்சி

ஆக்ரோஷமான கேப்டன்சி

முதல் போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும், கோலியின் ஆக்ரோஷமான கேப்டன்சி பாராட்டுக்களை பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் தோனி அணிக்கு திரும்பி கேப்டனாக செயல்பட்டார்.

தோல்வி

தோல்வி

இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது, மூன்றாவது போட்டியில் இந்தியா டிரா செய்தது. இந்தியா அப்போதே அந்த டெஸ்ட் தொடரை இழந்தது. அப்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இழந்ததால் தோனி மீது கடும் விமர்சனம் எழுந்தது.

தோனியை கோலியுடன் ஒப்பிட்டனர்

தோனியை கோலியுடன் ஒப்பிட்டனர்

மேலும், தோனியின் தனிப்பட்ட பேட்டிங் குறித்தும் விமர்சனம் எழுந்தது. சிலர் விராட் கோலியின் கேப்டன்சியுடன், தோனியை ஒப்பிட்டனர். மூன்றாவது டெஸ்ட் முடிவில் தோனி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

நான்காவது டெஸ்ட் முதல் விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அவர் டெஸ்ட் அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முன்னணி பேட்ஸ்மேன்

முன்னணி பேட்ஸ்மேன்

விராட் கோலியின் பேட்டிங் இங்கிலாந்து தொடருக்கு பின் புதிய மாற்றத்தை கண்டது. அதன் பின் கோலி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆக மாறினார். இங்கிலாந்து தொடருக்கு பின் தான் நீக்கப்படுவோம் என நினைத்ததாக கோலியே பேட்டிகளில் கூறி உள்ளார்.

மர்மம்

மர்மம்

ஆனால், தோனி மற்றும் தேர்வுக் குழு அவர் மீது நம்பிக்கை வைத்தனர். தோனி ஏன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு முடிவை எடுத்தார் என்பது இன்றும் வெளிவராத ரகசியமாகவே உள்ளது. அணியில் அப்போது என்ன நடந்தது? என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

Story first published: Tuesday, June 23, 2020, 16:51 [IST]
Other articles published on Jun 23, 2020
English summary
Virat Kohli was backed by Dhoni and then he retired in the next test series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+