டெல்லி : ஐபிஎல் 2020 தொடரின் போது அதிகமாக டிவீட் செய்த வீரர் என்ற பெருமை கேப்டன் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.
இதேபோல சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் அதிகமாக டிவீட் செய்த அணிகள் என்ற பெருமையை பெற்றுள்ளன.
இந்த அணிகளை போலவே விராட் கோலியும் தன்னுடைய அனைத்து செயல்பாடுகளையும் டிவிட்டரில் அவ்வப்போது பதிவு செய்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடர் கடந்த செப்டம்பர் 19ம் தேதி துவங்கி கடந்த 10ம் தேதி வரை பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. தொடரில் வெற்றிக் கோப்பையை கைப்பற்ற 8 அணிகளும் மும்முரம் காட்டிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஐந்தாவது கோப்பையை கைகொண்டது. இந்த முறை ஆர்சிபி அணி வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கோப்பையை கைப்பற்ற முடியாவிட்டாலும் அந்த அணி வேறொரு விஷயத்தில் சாதனை செய்துள்ளது. ஐபிஎல் 2020 தொடரின்போது அதிகமாக டிவீட் செய்த அணி என்ற பெருமை ஆர்சிபிக்கு கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணியும் இந்த பெருமையை படைத்துள்ளது. இந்நிலையில், தொடரின்போது அதிகமாக டிவீட் செய்த வீரர் என்ற பெருமை ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.